Thursday, October 10, 2019

உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள்.
சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின் பற்றுவதால். உய்கர் முஸ்லிம் மக்களுக்கும், அரசுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நடைபெற்று வந்தது.
சமீப காலமாக உய்கர் முஸ்லிம் மக்கள் மீது சீனா அரசு கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரு கின்றன.
இதையடுத்து சின்சியான் பிராந்தியத்தில் உய்கர் முஸ் லிம் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறி சீனாவின் 28 நிறுவனங்களை அமெ ரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்து தடை விதித்தது. பின்னர் சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ கூறிய தாவது:
சின்ஜியாங் உய்கர் தன் னாட்சி பகுதியில் வசிக்கும், உய்கர், கசக்ஸ், கிரிகிஸ் மற் றும் பிற முஸ்லிம் சிறுபான் மையினர் மீது சீன அரசு, அதிகளவு அடக்குமுறை களை கையாண்டு வருகிறது.
அப்பகுதியில் உள்ள சிறு பான்மையினரை காவலில் வைத்திருப்பவர்கள், அடக்கு முறையை கையாளும் அதி காரிகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் போன்ற சீன அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப் படும்.
இந்த அடக்குமுறைகளை நிறுத்துவதுடன், காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் சீன முஸ்லிம் சிறு பான்மையினர், வலுக்கட்டா யமாக சீனாவிற்கு திரும்பி வர அந்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்த வேண் டும். இவ்வாறு அவர் கூறி னார்.
அமெரிக்கா- சீனா இடை யேயான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் 10 மாத காலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதற் கான அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நாளை நடை பெறுகிறது. இதில் சீன நிறு வன அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.