Thursday, October 17, 2019

பசியால் வாடுவோர் இந்தியாவில் அதிகம்

உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத் தின்மை கொண்ட நாடுகள் பட்டியலில்  இந்தியா 102-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு 117 நாடுகளில் நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் 77 நாடுகளில் இந்தியா 55-ஆவது இடத்தில் இருந்தது.
உலகளாவிய, தேசிய மற்றும் பிராந்திய மட்டங் களில் பசி குறித்து  அளவிடு வதற்கும் கண்காணிப்பதற்கும், பசிக்கு எதிரான திட்டங்களில்  முன்னேற்றம் மற்றும் பின் னடைவுகளை மதிப்பிடுவ தற்கும் வருடாந்திர குறியீட்டு பட்டியல்  வடிவமைக்கப்படு கிறது.
தெற்காசிய நாடுகளில் இந்தியா இப்போது பாகிஸ் தான் (94) வங்காளதேசம்  (88), இலங்கை (66) ஆகியவற் றுக்கும்  கீழே உள்ளது.
இந்த பட்டியலில் இந்தி யாவில் குழந்தைகள் வீணாக் கும் உணவு 20.8 சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது. இது மிக உயர்வான சதவீதம் என்று குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது  என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்தியா இன்னும் அதன் பசி அளவில் தீவிரமாக பின்னோக்கி செல்கிறது. இதை உடனடியாக கவனத் தில் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது.
வெல்துங்கர்ஹில்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல் டுவைட் ஆகியவை  தயாரித்த அறிக்கையின்படி, கடுமை யான பசி  உள்ள 45  நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
2015-2016 நிலவரப்படி, 90 சதவீத இந்திய குடும்பங்கள் மேம்படுத்தப்பட்ட குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்தின. 39 சதவீத வீடுகளில் சுகாதார வசதிகள் இல்லை (அய்அய் பிஎஸ் மற்றும் அய்சிஎஃப் 2017)  என அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
பசியுடன் போராடுவதில் நேபாளம் மற்றும் பங்களா தேஷ் ஆகிய தெற்காசியா நாடுகளின் முயற்சிகளையும் இந்த அறிக்கை பாராட்டு கிறது. உலகளாவிய பசி குறி யீட்டில் இந்தியா பாகிஸ்தா னுக்கும், இலங்கைக்கும்  கீழே உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.