Monday, October 21, 2019

ஈரான் அதிபரும், மோடியும்


துய்மைப் பணியில் ஈடுபட்ட ஈரான் அதிபர் பதவி விலகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் வெளியிட்ட படத்தால் வியந்த உலகம்
முகமது அகமதிஜாத் 2005 முதல் 2013-ஆம் ஆண்டுவரை ஈரானின் அதிபராக இருந்தவர், இவர் தன்னுடைய பதவிகாலத்தில் பொதுமக்கள் தன்னார் வலர் தூய்மைப்பணி அமைப்பு என்ற அமைப்பில் உறுப்பினராக இருந்தார். தான் அதிபராக இருந்த காலகட்டத் திலும் அவ்வப்போது அந்த அமைப்புகள் நடத்தும் தூய்மைப்பணி முகாம்களில் கலந்துகொண்டு பணியாற்றியுள்ளார்.
2013-ஆம் ஆண்டு பதவி விலகிய பிறகு முழுநேரமும் அவ்வமைப்பின் ஊழிய ராக பணியாற்றத் துவங்கி விட்டார்.  இவர் ஈரான் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பொறியியல் பேராசிரியராக வும் உள்ளார்.  இவர் அதிபராக இருந்த போது தூய்மைப்பணி செய்ததை எந்த ஒரு பத்திரிகையும் படமாகவோ அல்லது காணொலியாகவோ பிடித்து முதல் பக்கத்தில் பெரிய படத்தோடு செய்தி களை வெளியிட வில்லை.   சமீபத்தில் முன்னாள் அதிபரின் பிறந்த நாளின் போது அவர் இணைந்திருந்த அமைப்பு அதிபராக இருந்த போது தங்களது குழு உறுப்பினர்களுடன் இருந்த போது எடுத்த படத்தை வெளியிட்டது.  இந்தப் படம் வெளியான பிறகுதான் அதிபர் தங்களது பகுதிக்கு வந்து தூய்மைப் பணியாற்றியிருந்தார் என்பதே அம் மக்களுக்கு தெரியவந்தது. அதிபரின் இந்த நடவடிக்கை பன்னாட்டு ஊடகங் களில் இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதே நேரத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் ஜோடனை தூய்மைப் பணியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.