Monday, October 7, 2019

தெலங்கானாவில் அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தெலங்கானாவில் அரசு போக்குவரத்து தொழி லாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தை சனியன்று (அக்.5) நள்ளிரவில் துவக்கினர்.  தெலங்கானா அரசு போக் குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு முன்வராததால் போராட்டத்தில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். அரசு எஸ்மா சட் டத்தை பயன்படுத்துவதாக வும், வேலை நிறுத்தம் செய் வோர் பணிநீக்கம் செய்யப் படுவர் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. எனினும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்து கழகத்தை (டிஎஸ்ஆர்டிசி) அரசுடன் இணைக்க வேண் டும் என்பது தொழிலாளர் களின் முக்கிய கோரிக்கை யாகும்.
ஆனால் இதுகுறித்து எந்த ஒரு முடிவும் மேற் கொள்ள அதிகாரிகள்  முன் வரவில்லை.
இதுகுறித்து கூட்டு போராட்டக்குழுவின் தலை வர் அஸ்வத்தாமா ரெட்டி கூறுகையில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 50,000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். டிஎஸ் ஆர்டிசியை பாதுகாக்க அனை வரது ஆதரவும் தேவை என்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.