Thursday, October 17, 2019

இந்திய அரசின் சாதனை இதுதான்!

இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட 69 சதவீத குழந்தைகள் ஊட்ட சத்து குறைவால் உயிரிழப்பு
அய்.நா.வின் யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சில ஊட்டச்சத்து பற்றாக் குறைக்கு இலக்காகிறார்கள்.  42 சதவீத குழந்தைகளே (6 முதல் 23 மாதங்கள் வரையி லான வயது) போதிய அள வில் உணவை பெறுகிறார்கள்.  21 சதவீத அளவிலான குழந் தைகளே போதிய பல்வேறு வகையான உணவை பெறு கின்றனர்.
இந்திய பெண்களின் சுகா தாரத்தில், ஒவ்வொரு 2ஆவது பெண்ணும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு உள்ளார்.  5 வயதுக்கு உட்பட்ட குழந் தைகளில் பரவலாக ரத்த சோகை காணப்படுகிறது.  சிறுவர்களை விட சிறுமி களில் நோய் பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது.
5 வயதுக்கு கீழுள்ள ஒவ் வொரு 5 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் ஏ பற்றாக்குறை உள்ளது.  ஒவ் வொரு 3 குழந்தைகளில் ஒன்றுக்கு வைட்டமின் பி12 பற்றாக்குறையும், ஒவ்வொரு 5 குழந்தைகளில் 2 குழந் தைகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டு உள்ளது.
தேசிய ஊட்ட சத்து திட்டம்
இந்தியா முழுவதும் ஊட்ட சத்து காரணிகளை ஊக்குவிப்பதில் போஷான் அபியான் அல்லது தேசிய ஊட்ட சத்து திட்டம் பெரு மளவிலான பங்கு வகிக்கிறது என அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.