Wednesday, October 9, 2019

சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

சூரியக் குடும் பத்தைச் சேர்ந்த சனி கிரகத் தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்து டன், அந்தக் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளின் எண் ணிக்கை 82-ஆக உயர்ந்துள் ளது. இதையடுத்து, அதிக நிலவுகளைக் கொண்ட சூரியக் குடும்பத்துக் கிரகம் என்ற பெருமையை சனி பெறுகிறது. இதுவரை 79 நிலவுகளைக் கொண்ட ஜூபி டரே அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக இருந்து வந்தது.
இதுகுறித்து பிரான்சி லுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களின் அமைப் பில் விஞ்ஞானிகள் சமர்ப் பித்துள்ள அறிக்கையில், புதிதாகக் கண்டறியப்பட்ட 1 நிலா சனி கிரகத்தைச் சுற்றி வர 3 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.