Wednesday, October 9, 2019

கீழடியில் நடைபெற்ற 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் திடீர் நிறுத்தம்!

தமிழறிஞர்கள் - சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!
கீழடியில் நடை பெற்று வந்த 5ஆம் கட்ட அகழாய் வுப் பணிகள் திடீர் என்று நிறுத்தப் பட்டுள்ளன. பணிக்கு வந்த தொழி லாளர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர். இதனால் தமிழனின் வரலாற்றை மூடி மறைக்கும் சூழ் நிலையில் எடப்பாடி அரசு ஈடுபட் டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ள னர்.
கீழடி அகழாய்வு!
கீழடி அகழாய்வின் மூலம், இரண்டாயிரத்து அறுநூறு ஆண் டுகளுக்கு முன்பே தமிழனின் நாகரீகம் பார்போற்றும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதினை மெய்ப்பித்துக் கொண் டிருக்கின்றன. இந்த அகழாய்வு மூலம் ஆழ்ந்த அறிவாலும், உலகின் மூத்த இனம் நம் தமிழ் இனம் என்பதற் கான அரிய சான்றுகள் நமக்கு கீழடியில் கிடைத்து கொண்டு இருக்கின்றன.
கீழடியில் நடைபெற்று முடிந்த நான்கு கட்ட ஆய்வின் மூலம் தமிழரின் நாகரீகம் உலகத்துக்கே முன்னோடி நாக ரீகம் என்பதினை மெய்ப்பிக்கும் வகையில் அமைந் திருந்தன.
இந்நிலையில் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஜூன் 13ஆம் தேதி அன்று தொடங் கப்பட்டது. அதில் தமிழன் 2600 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் எழுத்து வடிவம், மனித உருவம் கொண்ட பொம்மைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இரும்பு போன்ற உலோகப் பொருட்களை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ப தற்கு ஆதாரமாக நூற்றுக் கணக் கான பொருட்கள் கிடைத் துள்ளன. அன்றே நெசவுத் தொழிலை தமிழன் மேற்கொண்டு இருக்கிறான் என்ப தற்கான ஆதார மாக நெசவுத் தொழிலுக்கான நூல் நூற்ற கருவி யும் அகழாய்வில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
இந்த அகழாய்வுப் பணி, செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட் டுள்ளதாக தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்து இருந்தார். அதன்படி அக்டோபர் 15ஆம் தேதிவரை இந்த அகழாய்வு நடைபெற வேண்டும்.
இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பாகவே நேற்றுமுன்தினம்  (7.10.2019) முதல் அகழாய்வுப் பணிகள் திடீர் என்று நிறுத்தப் பட்டுள்ளன.
அகழாய்வுப் பணியில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட பணியாளர்களை மீண்டும் பணிக்கு வரவேண்டாம் என்று தொல்லியல் துறை அதி காரிகள் உத்தரவிட்டதுடன் பணிக்கு வந்தவர்களையும் திருப்பு அனுப்பியுள்ளனர்.
அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்தில் தற்போது அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். வேறு எந்தப் பணியும் அங்கு நடைபெறவில்லை.
கீழடியில் அகழாய்வுப் பணிகள் திடீர் என்று நிறுத்தப்பட்டுள்ளது தமிழறிஞர்களிடையே சமூக ஆர்வ லர்களிடமும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.