Thursday, October 17, 2019

உ.பி. பாஜகவினர் அதிர்ச்சி : மக்கள் ஆர்வம் காட்டாததால் பசுக்கள் பாதுகாப்பு திட்டம் தோல்வி

உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்த பசுக்கள் பாதுகாப்புத் திட்டத்தில் மக்கள் ஆர்வம் காட்டாததால் அந்த திட் டம் தோல்வி அடைந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடுகள் பல ஆதரவின்றி தெருக் களில் விடப்பட்டன.  இந்த மாடுகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மேய்ந்து பயிர்களை அழித்தன.   இதனால் கோபமடைந்த விவசாயிகள் ஆங்காங்கு உள்ள பள்ளிகளில் இந்த மாடுகளைப் பிடித்து அடைத்தனர்.    இதனால் குழந்தைகள் வெளியில் அமர்ந்து படிக்க நேரிட்டது.   இந்த புகைப்படங்கள் பல உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகின.
இதையொட்டி உத்தரப் பிரதேச மாநில அரசு தெருவில் திரியும் அனைத்து மாடுகளையும் அரசு அமைத்துள்ள தற்காலிக முகாம்க ளில் அடைத்தது.  இவ்வாறு 1 லட் சத்துக்கும் மேற்பட்ட மாடுகள் குறிப்பாகப் பசு மாடுகள் அரசு தற்காலிக முகாம்களில் அடைக்கப் பட்டன.  இந்த பசுக்களுக்காக மாநி லத்தை ஆளும் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய திட் டத்தை அறிவித்தார்.
பசுக்கள் பாதுகாப்புத் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஆதரவற்று திரியும் பசுக்களை மக்கள் தத்து எடுத்துப் பராமரிக்கலாம் என அரசு அறிவித்தது.   அவ்வாறு தத்து எடுக்கப் படும் ஒவ்வொரு பசுவுக்கும் தினம் ரூ.30 வீதம் மாதத்துக்கு ரூ.900 பராமரிப்புத் தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசு முகாம்களில் உள்ள அனைத்து மாடுகளும் தத்து எடுக்கப்படும் என முதல்வர் யோகி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை.  மாநில விலங்குகள் நலத்துறை தலைமை செயலர் பி.எல்.மீனா, “இதுவரை மக்கள் 9000 - 10000 மாடுகளை மட்டுமே தத்து எடுத்துள்ளனர்.   ஆகவே ஆதரவற்ற மாடுகளில் பல இன்னும் அரசு தற்காலிக முகாம்களில் உள்ளன.  எனவே தற்போதைய திட்டத்துக்கு மாற்றாக புதிய திட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உ.பி. பாஜக முதல்வரின் திட்டம் தோல்வி அடைந்தது மாநில பாஜக வினருக்கு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.