Wednesday, October 23, 2019

ரஷ்யாவும், கியூபாவும் இணைந்து பல்நோக்கு கதிர்வீச்சு மய்யம் அமைப்பு


இந்தியாவைப் போன்ற தனி சுதந்திர குடியரசு நாடான கியூபாவில், பல்வேறு பணிகளுக்கு பயன் படுத்தும் நோக்கிலான கதிர்வீச்சு மய் யம் ஒன்றை அமைக்க கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இதற்காக நடைபெற்ற நிகழ்வில் பங் கேற்று, கூட்டு ஒப்பந்தத்தில் ரசியா கையொப்பமிட்டது.
கியூபாவின் சார்பில் அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர் ஜோஸ் ஃபிடல் சந்தனா அவர்களும், ரஷ்யாவின் சார்பில், அந்நாட்டு அணு மின் சக்திக் கழகமான ரொசாட்டம் நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் நிக்கோலே ஸ்பாஸ்கை அவர்களும் இந்த ஒப்பந் தத்தில் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரசிய அணுமின் கழகமான ரொசாட்டம் நிறு வனம் சார்பில் கியூபாவிற்கு வழங்கப் படும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, ரொசாட்டம் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜே.எஸ்.சி. ரொசாட்டம்  ஹெல்த்கேர் வடிவமைத்து உருவாக்கும் பல்நோக்கு கதிர்வீச்சு மய்யம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகின்றன.
தற்போது அமைக்கப்படும் முதல் மய்யம் வெற்றிகரமாக அமைந்தால், இந்த இரு நாடுகளும் இணைந்து கியூபா வில் மேலும் பல இடங்களில் இது போன்ற மய்யங்களை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.