Saturday, October 19, 2019

குஜராத்: தேர்வு எழுதிய 119 நீதிபதிகளும் தோல்வி!

குஜராத் மாநிலத்தில், மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வை எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அவலம் அரங்கேறியுள்ளது. அதிலும் தேர்வை எழுதிய வர்களில் 119 பேர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளாக, நீதித்துறை அதிகாரிகளாக ஏற்கெனவே பணியாற்றி வரு பவர்களாக உள்ளனர்.
இவர்கள் தவிர ஆயிரத்து 372 வழக்குரைஞர்களும் தேர்வை எழுதி தோல்வி அடைந்துள்ளனர். குஜராத் மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 40 நீதிபதி பணியிடங்கள் காலியாகஉள்ளன. விதிமுறைகளின்படி, மொத்த காலிப் பணியிடங்களில் 65 சதவிகித இடங்கள், மூத்த உரிமையியல் நீதிபதிகளைக் கொண்டும், 25 சதவிகிதம் வழக்குரைஞர்கள் மூலமாக வும், 10 சதவிகிதம் மாவட்ட கூடுதல் நீதிபதிகளில் இருந் தும் நிரப்பப்பட வேண்டும். இதன்படி கடந்த ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு கள் நடைபெற்றன. இறுதி யாக 494 வழக்குரைஞர்களும் 119 நீதிபதிகளும் களத்தில் இருந் தனர்.
கடந்த வாரம் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலை யில் நீதிபதிகள் தேர்வில் ஒரு வர் கூட தேர்ச்சிபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இது நீதித்துறை வட் டாரத்தில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.