Tuesday, October 1, 2019

கீழடி 5ஆம் கட்ட அகழாய்வு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு ஜனவரியில் ஆறாம் கட்ட ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2 மற்றும் 3ஆம் கட்டமாக அகழாய்வு பணிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து 5ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட 4 கட்ட அகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 5ஆம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் அதிகளவில் கிடைத்து வருகின்றன. இரட்டை மற்றும் வட்டச்சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் போன் றவை கண்டறியப்பட்டன. இதே போல மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், செப்பு, வெள்ளி காசுகள், விசித்திர குறியீடுகள் போன்றவை கிடைத்துள்ளன.
இதுவரை 13,638 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆய்வு செய்ததில் 2,600 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கீழடியில் கிடைத்த பழமையான தொல் பொருட்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கீழடியில் நடைபெறும் 5ஆம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகளை அமைச்சர் மாபா பாண்டியராஜன் அதி காரிகளுடன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
கீழடி, கொந்தை, அகரம் மணலூரில் 6ஆம் கட்ட அகழ்வராய்ச்சி பணி ஜனவரியில் தொடங்கப்படும். கடந்த ஜுன் 13ஆம் தேதி தொடங்கிய கீழடி 5ஆம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகளை மேலும் 2 வாரங் களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது என்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.