Monday, October 7, 2019

திருப்பூரில் ரூ.5,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

 திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேற் பட்ட மதிப்பிலான பின்னலா டைகள் தேக்கமடைந்துள்ள தால் உள்நாட்டு வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. இது தொழில் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொல்கத்தா, லூதியானா, டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற போதிலும், பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இந்திய பின்னலாடைகளில் சரிபாதி உற்பத்தி திருப்பூரில் தான் நடைபெறுகிறது. பன் னாட்டு அளவில் பின்ன லாடை உற்பத்தியில் திருப்பூ ரின் பங்கு மட்டும் 3.5 சதவீதம். திருப்பூரில் மட்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வரு கின்றன. இந்தத் தொழிலில் நேரடியாக 4 லட்சம் பேர், மறைமுகமாக 6 லட்சம் பேர் என சுமார் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் இருந்து உற் பத்தி செய்யப்படும் பின்னலா டைகள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே வேளையில் ஏற்றுமதிக்கு நிக ராக வெளி மாநிலங்களுக்கும் திருப்பூரில் இருந்து பின்னலா டைகள் அனுப்பப்படுகின் றன. ஒருசில வேளைகளில் ஏற்றுமதி வர்த்தகம் குறையும் போது, உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்து காணப்பட்டது. இதில், கடந்த 2018--19-ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ. 25 ஆயிரம் கோடி, உள் நாட்டு வர்த்தகம் ரூ. 25 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு வர்த் தகம் நடைபெற்றுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.
இந்த நிலையில் வடமாநி லங்களில் பெய்த மழை வெள் ளம் காரணமாக சுமார் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட பின்னலாடைகள் தேக்கம டைந்துள்ளன. திருப்பூர் உள் நாட்டு வர்த்தகத்தின் சந்தை களாக உள்ள காதர்பேட்டை, ராயபுரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் வெளி மாநில வர்த்தகர்களின் எண் ணிக்கையும் குறைந்தே உள் ளது.
திருப்பூருக்கு வரும் வர்த்த கர்களின் எண்ணிக்கை இது வரை 10 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. இதையும் மீறி தேக்கமடைந்த ஆடை களை விற்பனை செய்ய வேண் டும் என்றால் நஷ்டத்துக்கு வர்த்தகம் செய்யும் நிலை தான். இந்த நிலைமையால், உள்நாட்டு சிறு உற்பத்தியா ளர்களும், சந்தை வியாபாரிக ளும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இது சீராக மேலும் சில மாதங்கள் தேவைப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.