Tuesday, October 1, 2019

நாட்டின் உண்மையான நிலையை கூறிய பொருளாதார வல்லுநர்கள் ரதின் ராய், ஷாமிகா ரவியை நீக்கியது மோடி அரசு


நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது என்று தொடர்ந்து உண்மையைக் கூறிவந்த- பொருளாதார வல்லுநர்கள் ரதின் ராய், ஷாமிகா ரவி ஆகியோர் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து (Economic Advisory Council to the Prime Minister - EAC-PM) நீக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பான விவரம் வருமாறு:  இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்று மத்திய அரசுத் தரப்பிலிருந்தே ஒலித்த முதல் குரல் என்றால், பிரதமர்நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ரதின் ராயின் குரல்தான் அது.“தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்றுமதி அடிப்படையில் பொரு ளாதார வளர்ச்சி உள்ளது. பிரேசில், தென்னாப் பிரிக்காவில் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கே பொருளாதார வளர்ச்சி உள்ளது. ஆனால், நம்முடைய நாட்டின் தற்போதைய பொரு ளாதாரபின்னடைவால், மேலே கண்ட நாடுகளை விட வளர்ச்சியில் கீழே செல்ல வாய்ப்பு உள்ளது. உண்மையில் இந்த பாதிப்பு கடுமையானது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா, பொரு ளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளது.”
- இது, கடந்த மே மாதம் ரதின் ராய் பேசியதாகும்.அடுத்ததாக 2019--_2020 நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, ஜூலை மாதமும், பொருளாதார நிலை குறித்த தனது கவலையை அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை.
அதுமட்டுமல்ல, மத்திய அரசின் 2019--_2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சுமார் ஒரு லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய்கணக்கில் காட்டப் படவில்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மையையும் ரதின் ராய் அம்பலப்படுத்தினார். 1.7 லட்சம் கோடிஎங்கே போனது?” என்ற அவரது கேள்விக்கு இப்போது வரை மோடி அரசு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரதின் ராய் வரிசையில், அவரைப் போலவே, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு பொருளாதார வல்லுநர் ஷாமிகா ரவி. நாட்டின் பொருளாதார சிக்கலை, மிக முக்கியமான நேரத்தில் பேசி தனது கடமையை ஆற்றியவர் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரான ஷாமிகா ரவியிடம், சுட்டுரைப் பக்கத்தில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். ஷாமிகா ரவியும் அதற்கு பதிலளித்து இருந்தார்.
“இந்தியா தற்போது பெரும் பொருளா தார தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. இது உண்மை தான். இதனைச் சமாளிக்க அனைத்துத் துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து, தேசியவளர்ச்சித் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். பொருளாதாரத்தை சீர்படுத்த பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படும்; வெறும் ஒட்டுவேலைகள் பயன்தராது. பொருளாதார வீழ்ச்சியை நிதியமைச்சகத்திடம் மட்டும் விட்டு விடுவது, நிறுவனத்தின் மொத்த வளர்ச்சியையும் கணக்குகள் துறையிடம் ஒப் படைப்பது போன்ற தாகவே இருக்கும்" என்று அவர் கூறினார்.
இவ்வாறு மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து உண்மைகளைப் பேசிவந்த பின்னணியிலேயே, புதன் கிழமையன்று மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலிருந்து ரதின் ராயும், ஷாமிகா ரவியும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பகுதிநேர ஆலோசகர்களாக குழுவில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதுஅவர்களுக்குப் பதில், ஜே.பி. மார்கன் நிறுவனத்தைச் சேர்ந்த சாஜித் செனாய் நியமிக்கப்பட்டுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்தபின், ரகுராம் ராஜன்துவங்கி அரவிந்த் சுப்பிரமணியன், உர்ஜித் படேல், விரால் ஆச்சார்யா என பொருளாதார வல்லுநர்கள் பலரும் அரசு நிர்வாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.