Friday, October 4, 2019

கட்டாய தலைக்கவச சட்டம் : 43 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு- உயர்நீதிமன்றத்தில் தகவல்

தலைக்கவசம் அணியாத விதி மீறலுக்காக நடப் பாண்டில் ஆகஸ்டு மாதம் வரை 43 லட்சத்து 31 ஆயிரத்து 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை டிஜிபி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில், வாகன ஓட்டிகள் தலைக்கவசம், சீட் பெல்ட் அணியாத காரணங்களால் தான் 70 முதல் 90 சதவீத விபத்துக்கள் ஏற்படுகின்றன.
தலைக்கவசம் அணியாததால் கடந்த  2016-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 91 பேரும், கடந்த 2017 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 956 பேரும் பலியாகி உள்ளனர்.
எனவே இருசக்கர வாகனங் களின் பின்னால் அமர்ந்து செல்ப வர்களும் தலைக்கவசம் அணிவதை யும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதை யும் கட்டாய மாக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டாய தலைக்கவச விவகாரத்தில் இதுவரை எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகளை அறிக் கையாக தாக்கல் செய்ய உத்தரவிட் டிருந்தது.
இந்த வழக்கு. நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக காவல் துறை டி.ஜி.பி. சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தலைக்கவசம் அணியாமல் இருச் சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படுகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை தலைக்கவசம் அணியாததற்காக 22 லட்சத்து 65 ஆயிரத்து 195 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப் பட்டது. நடப் பாண்டில் ஆகஸ்டு மாதம் வரை 43 லட்சத்து 31 ஆயிரத்து 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப் பட்டி ருந்தது.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், இணையதளங்கள் மூலம் உணவு முன்பதிவு செய்யப் படுகிறது. இந்த உணவை எடுத்து வரும் நபர்கள் தலைக்கவசம் அணியாமல் இருச்சக்கர வாகனங் களை வேகமாக ஓட்டிச் செல்வதாக, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.