Friday, October 4, 2019

கைவிட்ட மோடி, கைகொடுத்த கேரள முதல்வர்

கேரள மாநிலத் தைச் சேர்ந்த பாரத் தர்ம ஜனசேனா கட்சியின் தலைவர் துஷார் வெள்ளப் பள்ளி. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு அய்க்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மான் பகுதியில் கட்டு மானத் தொழில் செய்து வந்தார்.
தனது தொழில் முதலீடு செய்யக் கூறிய துஷார் வெள்ளப்பள்ளிக்கு அமீரகத்தைச் சேர்ந்த நஸில் அப் துல்லா என்பவர் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து உதவியுள்ளார். இந்த நிலையில் அரசியலில் ஈடுபடும் ஆசையில்  இருந்த துஷார் அமீரகத் தில் உள்ள கட்டுமான நிறுவனத்தை மூடிவிட்டு இந்தியா வந்துவிட்டார். இந்த நிலையில் தான் முதலீடு செய்த 19 கோடியை திரும்பத்தருமாறு அப்துல்லா கூறியுள்ளார். அவருக்குக் கொடுக்க வேண்டிய 19 கோடி ரூபாய்க்கு காசோலை கொடுத்து உள்ளார். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துள்ளது.
இதுகுறித்துப் பேசுவதற்காக துஷாரை நசில் அழைத்துள்ளார். துஷார் வெள்ளப் பள்ளி அஜ்மானுக்கு புறப்பட்டுச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சு வார்த்தை தகராறாக மாறிய நிலையில், அங் குள்ள காவல் நிலையத்தில் நசில் புகார் கொடுத்துள்ளார். அவர் புகாரின் அடிப்படையில் துஷார் வெள் ளப்பள்ளியை காவல்துறையினர் கைது செய்துசிறையில் அடைத்தனர்.  துஷாரின் குடும்பத்தினர் மாநில பாஜகவினரிடம் இது குறித்து கூறி வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி துஷாரை மீட்கும்படி வேண்டிக்கொண்டனர். ஆனால் கேரள பாஜகவினர் இது தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்துவிட்டனர். இந்த நிலையில் துஷாரின் தந்தை கேரள முதல்வரிடம் தனது மகன் அமீரக சிறையில் உள்ளதையும் பணம் தொடர்பாக கொடுக்கல் வாங்கலில் பல்வேறு பொய் புகார்கள் தன் மகன் மீது கூறியுள்ளனர், தனது மகன் வெளியில் வந்தால் அனைத்து சான்றுகளையும் தந்து வழக்கிலிருந்து விடுபடுவார் என்று கூறியுள்ளார்.
மாற்றுக்கட்சி தலைவர் என்றாலும் அவருக்கு உதவ கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதி அவரை மீட்க அனைத்து வகையான நடவடிக்கையும் எடுத்து வந்தார்.
இதனைத் தொடர்ந்துதுஷாருக்கு அமீரக நீதிமன்றம் பிணை வழங்க முடிவு செய்தது. பிணைக்கான ரூ.1 கோடியை கேரள முதல்வரின் அறிவுரைப்படி தொழில திபர் யூசுப் அலி என்பவர் செலுத்தி யுள்ளார். அதன்பின் துஷார் வெள் ளப்பள்ளி விடுவிக்கப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கில் நஸில் அப்துல்லா  தாக்கல் செய்த ஆவணங் கள் அனைத்துமே போலியானது என்று தகுந்த சான்றுகளுடன் துஷார் வெள்ளப்பள்ளி அமீரக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை அடுத்து துஷாரை அமீரக நீதிமன்றம் விடுதலை செய்தது, மேலும் வழக்கையும் ரத்து செய்தது. பின் அவர் கேரளா திரும்பினார்.
இதுதொடர்பாக அவர் தந்தை நடேசன் கூறுகையில், “பா.ஜ.க-வின் வேட்பாளராக ராகுல் காந்தியை எதிர்த்து நின்று போட்டிபோட்டவர் என் மகன். அவர் இவ்வளவு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டப் போது அவரை மீட்க பா.ஜ.க எந்தவித உதவியையும் செய்யவில்லை” என்று குற்றம் சாட்டினர்.
வயநாட்டில் ராகுலை எதிர்த்துப் போட்டியிட பாஜகவினர் பலரைத் தேர்ந்தெடுத்தபோதும் அனைவரும் ராகுலுக்கு எதிராக போட்டியிட முடியாது என நழுவி விட்டனர். இந்த நிலையில் கேரளாவில் தானே முன்வந்து ராகுலுக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்டார்.
கேரளாவில் தோல்வியடைந்த பல பாஜக வேட்பாளர்களுக்கு பதவிகளைத் தந்த பாஜக தலைமை துஷாரை கைகழுவி விட்டது, இந்த நிலையில் பொய்யான வழக்கில் சிக்கிய தனது கட்சி வேட்பாளரை பாஜக காப் பாற்ற முன்வராத போது  கேரள முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு அவரை இந்தியா கொண்டு வந்துள்ளார். கேரள முதல் வரின் இந்த  இந்த நடவடிக்கைக்கு பாரத் தர்ம ஜனசேனா கட்சியினர் நன்றி கூறி வருவது கேரளாவில்
மிகப் பெரிய வரவேற்பை பெற்று ள் ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன் றாகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.