Tuesday, October 1, 2019

தற்கொலைக்கு முக்கிய காரணம் அனைவரது கைகளில் இருக்கும் கைப்பேசி அரசு மனநல மருத்துவர் எச்சரிக்கை


தற்கொலைக்கு முக்கிய காரணமாக அனைவரது கைகளில் இருக்கும் கைப்பேசி உள் ளது என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிலைய அதிகாரி மற்றும் மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப் தெரிவித்தார்.
தமிழகத்தில் மருத்துவர் கள் பணிச் சுமை உள்ளிட்ட காரணங்களால் தற் கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மருத்துவர்களிடம் தற் கொலை எண்ணத்தைப் போக்க, தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத் தரங்கம் சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவ மனையில் நேற்று முன் தினம் நடைபெற்றது.
தற்கொலை தடுப்பு குறித்து மருத்துவமனை நிலைய அதிகாரி மற்றும் மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப் பேசியதாவது:
உலக அளவில் தினமும் 1 லட்சம் பேரில் 16 பேர் தற்கொலை செய்து கொள் கின்றனர். ஒரு நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பொதுவாக பணிச் சுமை, வேலை கிடைக் காதது, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, சூழ் நிலை, மனநோய், கடன் தொல்லை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பிரச்சினை போன்ற வற் றால் தற்கொலை முடிவுக் குச் செல்கின்றனர்.
முக்கியமாக நடிகர், நடி கைகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் தற்கொலை, மற்ற வர்களை தற்கொலைக்கு தூண்டு கிறது. இதற்கு முக்கிய கார ணமாக செல்போன் உள் ளது. இப்போது அனைவ ரது கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது.
பிரபலங்களின் தற்கொலை குறித்த செய்தி மற்றும் நிழல் படங்கள் முகநூல், சுட்டுரை, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊட கங்களில் வைரலாக பரவு வதற்கு கைப்பேசிதான் காரணம். இதன் மூலம் சிறிய பிரச்சினை என்றா லும், அந்த பிரபலமே தற் கொலை செய்து கொள் கிறார். நாம் தற்கொலை செய்து கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றுகிறது.
தற்கொலைக்கு முயற் சித்தவர் உயிர் பிழைத்தால், அவர் குற்ற உணர்ச்சியில் இருப்பார். வெளிநாடுக ளில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்வது கொள் வது அதிகமாக நடக்கிறது. ஆனால், நமது நாட்டில் பூச்சி மருந்து குடிப்பது, தூக்கு போடுவது, தூக்க மாத்திரை சாப்பிடுவது, கிணறு, ஆறு, கடல் மற்றும் பெரிய கட்டிடத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கின் றனர்.
இதில், பெரிய கட்டிடத் தின் மேல் இருந்து ஆண் கள்தான் அதிக அளவில் குதிக்கின்றனர். தற்கொலை யைத் தடுக்க மன நல ஆலோசனைகள், மனநல மருத்துவ சிகிச்சை உள் ளிட்ட சிகிச்சை கள் உள் ளன. ஆனால், பலர் சிகிச் சையை, தொடர்ந்து எடுத் துக் கொள்வதில்லை. மருத் துவம் என்பது பணி இல்லை. இது ஒரு சேவை. மருத்துவர்கள், பணியை சுமையாக நினைக்காமல், சேவையாக கருதினால் தற் கொலை எண்ணம் வரவே வராது. கூடுதல் பணியாக இருந்தால், புதிதாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப் பாக கருத வேண்டும்.
இவ்வாறு மருத்துவர் ஆனந்த் பிரதாப் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.