Tuesday, October 22, 2019

இணையதள மோசடியை தடுக்க புதிய திட்டம்

விழாக் காலத்தை முன்னிட்டு,  இ-காமர்ஸ் நிறுவனங்கள், பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அளித்து, வாடிக்கை யாளர்களை கவர்ந்து வருகின்றன. சைபர் குற்றவாளிகளின் கைவரி சையும் அதிகரித்திருப்பதால் இணையதளக் கொள்முதலில் பாது காப்பிலும், கவனம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்து காஸ்பெர்ஸ்கி நிறுவன மேலாளர் சிவசங்கர் கார்டே, கூறுகையில், "விழாக் காலத்தில், இ-காமர்ஸ் நிறுவனங்கள், தீவிர ஆர்வம் காட்டும் நிலையில், சைபர் குற்றவாளிகளும் கைவரிசை காட்ட, இதை ஒரு வாய்ப்பாகபயன்படுத்திக்கொள்ள முற்படுகிறது. ஆன்லைன் கொள்முதலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதில், கவனம் செலுத்த வேண்டும்.
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான காஸ்பெர்ஸ்கி, விழாக்காலத்தை முன்னிட்டு புதிய சலுகைகளையும் பரிசு திட்டங்களையும் அறிவித்துள்ளது.
இணைய வசதிபல்வேறு வங்கிகள் மற்றும் நிதிநுட்ப நிறுவனங் களுடனான கூட்டால், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்பாடு, இந்த காலத்தில் அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுவதால், சைபர் குற்றவாளிகள் வலைவிரிக்க காத்திருக்கின்றனர். இதனால் பாதுகாப் பான முறையில் இணைய தள பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.