Thursday, October 10, 2019

பிஜேபி ஆட்சியின் சாதனை இதுதான்!

உலக நாடுகள் தரவரிசையில் இந்தியாவுக்கு 68ஆவது இடம்!

உலக பொருளாதார மய்யம் தகவல்

கடந்த 2014ஆம் ஆண்டி லிருந்து இரண்டாம் முறையாக ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து கொண்டி ருக்கும் பாஜக அரசு குறைந்த நிர்வாகம், நிறைந்த ஆளுமை என்றும், வளர்ச்சி வளர்ச்சி என்றும், நல்ல நாள் என்று பல முழக்கங்களை முன்னிறுத்தி வந்துள் ளது.
ஆனால், நிர்வாகத்தில் பொருளா தார வல்லுநர்களின் ஆலோசனைகளை பின்னுக்குத்தள்ளிவிட்டு, பண மதிப் பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக் கை களை முறைப்படி நாடாளுமன்றத்தில் அறிவித்து விவாதங்களை மேற்கொண்டு செயல்படுத்தாமல் திடீர் திடீர் அறிவிப்புகாளகவே செயல்படுத்தி வருகிறது.
தற்பொழுது உலக பொருளாதார மய்யம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியல் பாஜக அரசின் மோசமான அணுகுமுறையுடன் கூடிய நிர்வாகத்தின் நிலையை பறைசாற்றுவதாக அமைந் துள்ளது.
இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது
உலகப் பொருளாதார மய்யத்தின் அறிக்கையின்படி, உலகளாவிய போட் டித்திறன் அட்டவணையில் இந்தியா வின் இடம் பின்னுக்குத் தள்ளப்பட் டுள்ளது. ஓராண்டில் 10 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. முந் தைய ஆண்டில் 58ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 68ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பிற நாடுகள் தங்களது பொருளாதார கட்டமைப்பில் முன்னேறிய நிலையில் இந்தியா பின்னடைவை சந் தித்துள்ளது. இந்த தகவலை உலகப் பொருளாதார மய்யம் வெளியிட்டு இருக்கிறது.
குறிப்பாக சுகாதாரமான வாழ்க்கை, தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் போட்டித்திறன் மதிப் பீட்டில் பின்னடைவை சந்தித்துள்ளது என்று உலகப் பொருளாதார மய்யம் வெளியிட்ட அறிவிப்பில் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம், தொழில் நுட்பம், உள்கட்டமைப்பு, புதிய கண்டு பிடிப்புகள், கல்வி, திறன், சுகாதாரம் உட்பட நாட்டின் வளர்ச்சிக்கான கார ணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டவணை உரு வாக்கப்படுகிறது. உலகளாவிய 141 நாடுகள் இதில் பட் டியலிடப்பட்டுள்ளன. அதில் இந்தியா 68ஆவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஜெனிவா நகரில் உள்ள உலகப் பொருளாதாரம் மய்யம் வெளியிட்ட அறிவிப்பில்,
‘பேரியல் பொருளாதாரம், சந்தை அளவு அடிப்படையில் இந்தியா முன் னணி இடத்தில் இருக்கிறது. குறிப்பாக சந்தை அளவு அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருந்த போதிலும் அடிப்படை வசதிகள் வகை யில் இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது. சுகாதாரம் அளவில் இந்திய மிக மோசமான இடத் தில் உள்ளது.
குடிமக்களுக்கு சுகாதாரமான வாழ்க் கையை உருவாக்கித் தர இந்தியா தவறியுள்ளது. தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமை இந்தியாவில் முறை யாக வழங்கப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால் போட்டித் திறன் மதிப்பீட்டில் இந்தியா பின்ன டைவை சந்தித்துள்ளது. குடிமக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை அடிப் படையில், மொத்த முள்ள 141 நாடுகளில் இந்தியா 109 இடத்தில் உள்ளது. இது தவிர, திறன் அடிப்படையிலும் இந்தியா பின்தங்கி உள்ளது. போதிய திறன் கொண்ட பணியாளர்கள் இந்தியாவில் குறைவாக உள்ளனர். திறன் அடிப் படையில் 107ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல் பணிச்சூழல் அடிப்படை யில் பாலினப் பாகுபாடு இந்தியாவில் அதிக அளவில் நிலவுகிறது. ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கான வேறுபாடு அதிகமாக உள்ளது. பாலி னப் பாகுபாடு அடிப்படையில் இந்தியா 128ஆவது இடத்தில் உள்ளது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டே உலகளாவிய போட்டித்திறன் தரவரிசை அளிக்கப்படுகிறது. அதன் அடிப்ப டையில் இந்தியா முந்தைய ஆண்டை விட 10 இடங்கள் சரிந்து 68ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந் தியாவைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான இலங்கை(84), வங்க தேசம்(105), நேபாளம் (108), பாகிஸ் தான் (110) இடங்களில் உள்ளன.
கொலம்பியா, தென் ஆப் பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள் முந்தயை ஆண்டுகளில் இந்தியாவை விட பின் தங்கி இருந்தன. அந்நாடுகள் தற்போது தரவரிசையில் இந்தியாவை முந்தியுள் ளன.
இந்த தரவரிசையில் சிங்கப்பூர், அமெரிக்காவை பின்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 2ஆவது இடத்திலும், சிறப்பு நிர் வாகத்துக்குகீழான ஹாங்காங் 3ஆவது இடத்திலும், நெதர்லாந்து 4ஆவது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5ஆவது இடத்திலும் உள்ளன. சீனா 28ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
குடிமக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கையை உருவாக்கித் தர இந்தியா தவறியுள்ளது. தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமை இந்தியாவில் முறையாக வழங்கப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால் போட்டித் திறன் மதிப்பீட்டில் இந்தியா பின் னடைவை சந்தித்து உள்ளது என்று உலகப் பொருளாதார மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட் டுள்ளது.
பன்னாட்டு நிதியமும் எச்சரித்துள்ளது!
உலகின் 90 சதவீதம் நாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவுவதாகவும், அதில், இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நிலைமை மோசமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத் தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோ மொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின், வாஷிங்டனில் இருக்கும் பன்னாட்டு நாணய நிதியத்தின் (அய்.எம்.எப்) தலைமையகத்தில் (9.10.2019) நடைபெற்ற நிகழ்வில் கிறிஸ்டலினா ஜார்ஜிவா நிகழ்ச்சி  பேசியுள்ளார். அப்போது, ஒருங்கிணைந்த மந்த நிலையை, உலகப் பொருளாதாரம் தற்போது சந்தித்து வருவ தாக அவர் தெரிவித்தார். மேலும், “நடப்பு 2019_20 நிதியாண் டில், 90 சதவிகிதநாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்தித்துவருகின்றனர். இந்த மந்த நிலைக்கு பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவைதான் காரணம். இந்த வர்த்தகப் போர் காரணமாக உலக அளவில், பொருளாதார வளர்ச்சி விகிதமானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போகிறது. குறிப்பாக, இந்தியாவில், நடப்பாண்டில் பொருளாதார மந்த நிலை மிக கடுமையாக இருக்கும்” என்று கூறியுள்ள கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, “மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தகத் திறனைப் பெருக்க வேண்டும். உலகப் பொருளாதாரம் இன்னும் வளர்முகமாகவே உள்ளது. ஆனால், மிகவும் மெ துவாக வளர்கிறது. இந்த நிலையை சீர்திருத்தவும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் நாம் மெத்தனமாக இருந்து விட முடியாது. நாம் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக இந்தியா குறித்து கடந்த செப்டம்பர் மாதமே பன்னாட்டு நாணய நிதியம் கூறுகையில், “இந்தியாவில் கார்ப்பரேட் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் என பலவற்றுக்கும் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அமைந்துள்ளது.
2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பன்னாட்டு நாணய நிதியம் “இந்தியாவின்  பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் கடுமையான சரிவைச் சந்திக்கும் இதனால் உலக முதலீட்டாளர்கள் தஙக்ளின் முதலீடுகளை திரும்ப பெற நேரும், இதன் மூலம் இந்தியாவில் தொழில் துறை கடு¬ மயான வீழ்ச்சியை சந்திக்கும் என்று எச்சரிக்கை செய்திருந்தது,
ஆனால் அந்த எச்சரிக்கையை அப்போதை நிதி அமைச் சராக இருந்த மறைந்த அருண் ஜெட்லி பன்னாடு நாணய நிதியகம் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சியை இங்குள்ள எதிர்கட்சிகளும் மோடியின் ஆட்சியைப் பிடிக்காதவர்களும் கொடுக்கும் புள்ளிவிபரங்களைப் பார்த்து அறிக்கை விடுகிறது, ஜிஎஸ்டிக்குப் பிறகு இந்திய பொருளாதார மி கவேகமாக வளர்ந்து வரும் என்றும் 2019 மற்றும் 2020-ஆம்  இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது வல்லரசு என்னும் குறிக்கோளை நோக்கி செல்லவதாக அமையும் என்று கூறியிருந்தார்.
அன்னிய முதலீடுகள் வேகமாக வெளியேறிக்கொண்டு இருக்கிறது, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதித்துறையும் முடங்கிக்கிடக்கிறது, மோட்டார் வாகன தொழில்துறை முற்றிலும் இழப்பைச் சந்தித்து தங்களது நிறுவனங்களை மூடிவருகிறது. பன்னாட்டு நாணய நிதியம் ஏற்கெனவே எச்சரித்தது தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றுவரை பொரு ளாதார சரிவு குறித்து மோடியோ அல்லது நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.