Thursday, October 10, 2019

’பாரத் மாதா கீ ஜே’ சொல்லாத நீங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளீர்களா? பா.ஜ.க/ வேட்பாளரின் அடாவடிப் பேச்சு

"நீங்கள் எல்லோரும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா? நீங்கள் இந்தியர்கள் என்றால் 'பாரத் மாதா கீ ஜே' என்று கூறுங்கள்.
'பாரத் மாதா கி ஜே' என்று முழக்கம் எழுப்ப முடியாத இந்தியர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்" என்று அரியானாவில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் டிக்டாக் பிரபலம் சோனாலி போகாத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக் கான வாக்குப் பதிவு அக்டோபர் 21ஆ-ம் தேதி நடைபெற வுள்ளது. பா.ஜ.க, சார்பில் ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதி யில் டிக்டாக் பிரபலம் சோனாலி போகாத் போட்டியிடு கிறார். அவர், தற்போது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பால்சமந்த் கிராமத்தில் பிரச்சாரம் செய்த அவர், கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து 'பாரத் மாதா கி ஜே' என்று கூறி மீண்டும் மக்களை பதில் முழக்கம் எழுப்பச் சொல்லியிருக்கிறார். பலரும் பதில் முழக்கம் எழுப்பாமல் அமைதியாக இருந்துள்ளனர்.
அதனால், கோபமடைந்த அவர், ‘நீங்கள் எல்லாரும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா? நீங்கள் இந்தியர்கள் என்றால் 'பாரத் மாதா கீ ஜே' என்று கூறுங்கள். நாட்டுக்காக ஜே என கூற முடியாத உங்களைப் போன்ற இந்தியர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல முடியாதவர்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை’ என்று சர்ச்சைக் குரிய வகையில் பேசியுள்ளார். அவர், பேசிய காணொலி தற் போது வைரலாகிவருகிறது. மூன்று முறை காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் குல்தீப் பிஸ்ஸோனாய்க்கு எதிராக இவர் போட்டியிடுகிறார்.
இவர் டிக்டாக் என்னும் கைப்பேசி காணொலியில் திரைப்படப் பாடல்களுக்கு ஆபாசமாக அசைவுகளைக் காட்டிப் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.