Monday, October 7, 2019

சுற்றுச்சூழல் பேச்சுப் போட்டியில் வெற்றி: ஜப்பான் செல்லும் அரசுப் பள்ளி மாணவி

சுற்றுச்சூழல் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னையைச் சேந்த அரசுப் பள்ளி மாணவி உள்பட, தமிழகத்தைச் சேந்த நான்கு மாணவ, மாணவிகள் ஜப்பானுக்கு கல்வி, கலாச்சாரம் சாந்த சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படவுள்ளனர்.
தொழிற்பயிற்சிக்காக ஜப்பான் சென்று திரும்பியவர்களால் தொடங் கப்பட்ட ஏபிகே- ஏஓடிஎஸ் தமிழ்நாடு மய்யமானது, ஹியோசி என்னும் ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான இறுதிப் போட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரி, ஜப்பான் கல்வி மய்யம் என ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசு, சான்றிதழ்களை ஜப்பான் துணைத் தூதரக அதிகாரி கொஜீரோ உஸியாமா வழங்கினர்.
இந்தப் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்த மாணவ, மாணவிகள் மட்டும் வரும் 20-ஆம் தேதி ஜப்பானுக்கு 12 நாள்கள் கல்வி, கலாச்சார சுற்றுலாவுக்கு இல வசமாக அழைத்துச் செல்லப்பட வுள்ளனர்.
இந்தச் சுற்றுலாவுக்கு அரசுப் பள்ளிகள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த, சென்னை பெரம்பூரில் உள்ள சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ் 1 பயிலும் கே.பிரியா தேர்வு பெற்றுள்ளா£ர்.
வியாசர் பாடியில் குடும்பத்துடன் வசித்து வரும் அவருக்கு, ஜப்பான் கல்வி மய்யத்தில் ஜப்பான் மொழியின் 5 நிலைகள் குறித்த பயிற்சிகளும் இலவசமாக அளிக்கப் படவுள்ளன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.