Saturday, October 5, 2019

மூடநம்பிக்கையின் கொடூரம் குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் சூனியத்தை எடுத்துவிடு என்று கூறிய காவலர்கள்

ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்ஷம்பூர் மாவட் டத்தில் கோபாப்பூர் என்ற கிராமம் உள்ளது, அந்த கிராமத்தில் தொடர்ந்து பெண்கள் மரணமடைந்து வந்தனர். இதனை அடுத்து ஊரில் மிகவும் வயதான 8 முதியவர்கள் தான் சூனியம் வைத்துவிட்டார்கள் என்று கூறி ஊர் மக்கள் திரண்டு அந்த முதியவர்களின் குடி சைக்குள் புகுந்து அவர்களை வெளியே இழுத்து வந்தனர். ஊர் நடுவி முதியவர்களைக் கட்டிவைத்து அடித்தனர்.
பின்னர் ஊர் பஞ்சாய்த்து கூடி முதியவர்கள் வைத்த பில்லி சூனியத்தால்தான் பெண்கள் தொடர்ந்து மரண மடைந்து வருகின்றனர். ஆகவே, அந்த முதியவர்களின் பல்லைப் பிடுங்கிவிட வேண் டும் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்தனர். இதனை அடுத்து  முதியவர்களின் வய தைக்கூட கணக்கில் எடுத்து கொள்ளாமல்,  அவர்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, கற்களை வைத்து அவர்களின் வாயில் உள்ள பற்களை உடைக்க ஆரம்பித் தனர். சில பெண்கள், இடுக் கிகளை கொண்டு வந்து, அதன்மூலம் பற்களை பிடுங் கினர். இப்படி கொடூரமாக நடந்து கொண்ட விவகாரத் தில், முதியவர்களும் வலியால் அலறினர். இது எல்லாவற் றிற்கும் மேலாக மனித மலத்தை கொண்டு வந்து அவர்களின் வாயில் திணித் துள்ளனர்.  இது தொடர்பாக மிகவும் தாமதமாக காவல் துறையினருக்கு யாரோ தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து ஊர் மக் களிடம் இருந்து முதியவர் களை மீட்டு மருத்துவமனை யில் சேர்த்தனர். மருத்துவ மனையில் விசாரணையின் போது காவலர்கள் முதியவர் களிடம் ‘‘நீங்கள் வைத்த சூனியத்தை எடுத்துவிடுங்கள்; அதுதான் ஊருக்கு நல்லது'' என்று மருத்துவர்கள் முன்பு முதியவர்களை எச்சரிக்கும் விதத்தில் கூறியுள்ளனர்.
குற்றவாளிகளை பிடித்து விசாரிப்பதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களை விசாரணை செய்யும் காவ லர்கள் சூனியத்தை எடுத்து விடு என்று கூறியது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக ஊர்க்காரர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.