Monday, October 21, 2019

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சுதந்திரப் போர் தேவை

ஆர்.நல்லகண்ணு

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போர் தேவை என்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது என்று மூத்த அரசியல்வாதி ஆர்.நல்லகண்ணு கூறினார்.
வங்கி ஊழியர் சங்க சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற ஆர்.நல்ல கண்ணு பேசியது:
மத்தியில் ஆளும் பாஜக, இரண்டாவது முறை ஆட் சிக்கு வந்தவுடன், பொறுப்பேற்ற 100 நாள்களில், 36 நாள்களில் மட்டும் 36 மசோதாக்களை நிறை வேற்றி இருக்கிறது. முந்தைய ஆட் சிக் காலத்தில், போதிய பெரும் பான்மை இல்லாததால், தேவையற்ற திட்டங் களைச் செயல்படுத்த மத்தியில் ஆளும் இந்த அரசு முனைப்புக் காட்டவில்லை.
ஆனால், மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அறுதிப் பெரும்பான்மை இருப்பதால், இவ் வாறான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். புதிய மசோ தாக்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் இல்லை. அவை தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளன. பாஜக அரசு 5 ஆண்டு திட்டத்தை ரத்து செய்து, நிதி ஆயோக் என்பதை உருவாக்கியது. இதனால் புதிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
5 ஆண்டு திட்டங்கள் நிறுத்தப்பட் டது, நாட்டின் வளர்ச்சிக்குத்தான் ஆபத்தாக மாறியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போர் தேவை என்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது. இதற்கு, மதச் சார்பற்ற கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும், வெகு ஜன மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண் டும் என்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.