Monday, November 18, 2019

பன்னாட்டு குழந்தைகள் திரைப்பட விழா

பன்னாட்டு குழந்தைகள் திரைப்பட திருவிழா (Dell-IKFF) என்பது, இவ்வகையினத்தில் முதன் முறையாக, பள்ளிகளில் திரையிடப்பட்டு கொண்டாடப்படும் ஒரு பன்னாட்டு திரைப்பட திருவிழாவாகும்.  தற்போது மூன்றாவது பதிப்பாக நடைபெறுகின்ற இத்திருவிழா, திரைப்படங்களின் மேஜிக்கை சிறார்களுக்கு அறிமுகம் செய்யவும், அதன் ஆற்றலைப் பயன்படுத்தி கற்பிக்கவும, உத்வேகமளிக்கவும் முற்படுகிறது.
IKFF 2019 நிகழ்வானது, 40 நாடுகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான பள்ளிமாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இலக்காக கொண்டு பள்ளிகளில் நடத்தப்படுகின்ற உலகின் மிகப்பெரிய திரைப்பட திருவிழாவாகும்.
டெல் ஆரம்ப் திட்டத்தின் வழியாக கணினி கற்றலை ஆசிரியர்களுக்கும், தாய்மார்களுக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளிகளின் மாணவர்களுக்கும் டெல் கொண்டு சென்றிருக்கிறது. தொழில்நுட்ப கல்வியறிவானது, எதிர்கால தொழில்முறை பணியாளர்கள் குழுவில் இணையவிருக்கின்ற சிறார்களுக்கு நிச்சயமாக தேவைப்படுகின்ற அடிப்படைஅம்சமாக இருக்கிறது என்ற பகிரப்படுகின்ற நம்பிக்கையிலிருந்தே IKFF 2019 உடனான எமது கூட்டுவகிப்பு செயல்பாடு உருவாகியிருக்கிறது, என்று CSB    டெல் டெக்னாலஜிஸ், இயக்குனர் ரீத்துகுப்தாகுறிப்பிட்டுள்ளார்.

Thursday, November 14, 2019

புதிய கருந்துளை கண்டுபிடிப்பு

சூரியனைப் போன்று வெறும் 3.3 மடங்கு மட்டுமே நிறையுடன் கூடிய புதிய கருந்துளையைக் கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட திலேயே இது தான் மிகச்சிறியது எனத் தெரிவித்துள்ளனர். உருவில் பெரிய நட்சத்திரமானது தனது ஆற்றலை இழந்து உருக்குலைந்து வெடித்துச் சிதறும் போது அதீத ஈர்ப்பு விசையைக் கொண்ட கருந்துளையாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேவேளையில் வெடித்துச் சிதறும் போது நியூட்ரான் நட்சத்திரங்களாவதாகவும் அவர்கள் குறிப்பிடு கின்றனர். ஆனால் இந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரிய னுடன் ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு மட்டுமே அளவில் பெரியதாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சூரியனுடன் ஒப்பிடுகையில் 4000 கோடி மடங்கு பெரியது தொடங்கி குறைந்தது 5 முதல் 15 மடங்கு பெரிய கருந்து களைகளை இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், சூரியனை விட 3.3 மடங்கு மட்டுமே அளவில் பெரிய கருந்துளையை ஓகியோ மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு முன் சூரியனை விட 3.8 மடங்கு பெரிய கருந்துளை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
நியூட்ரான் நட்சத்திரத்திற்கு இவ்வளவு பெரிய நிறை இல்லாத போது, இந்த சிறிய கருந்துளை உண்டானது எப்படி என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்வியானது நட்சத்திரங்களின் வாழ்க்கைச் சுழற்சி பற்றிய மறுவரையறைக்கு வழிவகுத் திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்

இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம் வோடபோன் தலைவர் பரபரப்பு

இந்தியாவில் தொலைதொடர்பு துறையில் உள்ள நிறுவனங்களுக்கு சிக்கல் தான். இனி தொழில் நடத்த  முடியாத சூழ்நிலை காணப்படுகிறது என்று வோடபோன் தலைவர் கூறி யுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல வோடபோன் நிறுவ னத்தின் சிஇஓ நிக் ரீடு நேற்று டில்லியில் பேட்டியளித் தார்.  அவர் கூறியதாவது: இந்தியாவில் தொழில் முதலீடு மற்றும் வாய்ப்பு மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டி ருக்கிறது. எனினும், நம்பிக் கையுடன் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம்.
அதற்கான சந்தையும் இருப்பதை கணித்துள்ளோம். சந்தையில் கடுமையான தொழில் போட்டியை சமா ளிக்க வேண்டியது இருக்கும் என்பதும் எங்களுக்கு தெரி யும். அதற்கு நாங்கள் சமா ளிக்க தயாராக இருக்கிறோம்.
கடும் போட்டி நிலவு வதால் இந்தியாவில் இருந்து வோடபோன் வெளியேற உள்ளது என்ற வதந்தி சமீப காலமாக பரப்பப்பட்டு வரு கிறது. இதில் உண்மை இல்லை. இந்த வதந்தியை நம்ப வேண்டாம். வோடபோன் நிறுவனம் தனது சேவையை தொடர்ந்து அளிக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழில் போட்டியை சமா ளிக்க தகுந்த உத்திகளை கையாள்வது குறித்து ஆலோ சித்து வருகிறோம்.இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். தொழில் போட்டியில் சீரான அணுகு முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறியுள் ளோம்.
வோடபோன்-அய்டியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை செய்து வுகின்றன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளிக்கும் சலுகைகள் மற்றும் கூடுதல் வசதிகள் மற்ற நிறுவனங்க ளின் வர்த்தகத்தை  கடுமை யாக பாதிக்கிறது.
இதனால் அவை தொழில் போட்டியை சமாளிக்க முடி யாமல் திணறிவருகின்றன.  இவ்வாறு வோடபோன் தலைவர் நிக் ரீடு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பெண்களுக்காக 150 நவீன இ-கழிப்பறைகள்

சென்னை யில் பெண்களுக்காக ரூ.8 கோடி செலவில் 150 நவீன இ--கழிப்பறைகளை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகரப் பகு தியில் 74 லட்சம் பேர் நிரந்த ரமாக வசித்து வருகின்றனர். மேலும், சென்னைக்கு தின மும் வந்து செல்வது, சில நாட்கள் தங்கிச் செல்வது என 20 லட்சத்துக்கும் மேற் பட்டோர் உள்ளனர். சென் னையில் பயணம் செய்வோ ருக்கு ஏற்ற வகையிலும், குடி சைப் பகுதிகளுக்கு அருகில் 853 இடங்களில் 6,701 இருக் கைகளை கொண்ட பொதுக் கழிப்பிடங்களை சென்னை மாநகராட்சி அமைத்துள் ளது. தூய்மை இந்தியா திட் டத்தின்கீழ் அந்த கழிப்பி டங்கள் தூய்மையாக பரா மரிக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிருக்கான கழிப் பறைகளை அதிகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மாநக ராட்சி அதிகாரிகள் கூறியதா வது:
வெளியில் செல்லும் பொது மக்கள் தங்கள் இயற்கை உபா தைகளை கழிக்க போதிய இடவசதியின்றி அவதிப்படு கின்றனர். குறிப்பாக ஆண் களை விட, பெண்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களின் சிர மத்தை போக்கும் வகையில் மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், பல்வேறு இடங்களில் ரூ.8 கோடி செலவில் மகளிருக்கான 150 நவீன இ-கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த கழிவறைகளை இணையத்தில் கண்காணிக்க முடியும். நீர் இருப்பு, மின் வசதி போன்ற விவரங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே பெற முடியும். மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த நவீன இ-கழிப்பறைகள் அமைக்கப் பட உள்ளன.
பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் இருப்பி டங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, அனைத்து பொது கழிப்பிடங்களும் கூகுள் வரைபடத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் கூகுள் வரைபடம் ஆகியவை இணைந்து இதற்கான நடவ டிக் கையை மேற்கொண்டனர். கூகுள் வரைபடத்தில் ‘ஜிஷீவீறீமீt’ என தட்டச்சு செய்தால், தங்களின் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களின் விவரங்கள் கிடைக்கும். இவ் வாறு அதிகாரிகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து முன்னணியின் அராஜகம்

திருப்பூரில் "ஜிம்" பயிற்சி கூடத்திற்குள் புகுந்து பயிற்சியாளர் மீது இந்து முன்னணி கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தி யதில் பயிற்சியாளர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் பாண்டியன் நகர்ப்பகுதியில் திருமுருகன்பூண்டி காவல்நிலையத்திற்குட்பட்ட அம்மன் நகரில் "கவின் ஃபிட்னஸ் ஜிம்" என்ற உடற்பயிற்சி கூடத்தை ஜெயமுருகன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.இவரது உடற்பயிற்சிக் கூடத் தில் திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சார்ந்த வில்சன் டேனியல் (வயது 23) என்பவர் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் அப்பகுதியில் இருக்கும் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த சிலர் உடற்பயிற்சி கூடத்தில் சேர வந்துள்ளனர்.பயிற்சியாளர் வில்சன் டேனியல் பயிற்சிக் கட்டணம் குறித்த நடைமுறையைக் கூறியுள்ளார்.இதுதொடர்பாக பயிற்சியாளர் வில்சன் டேனியலுக்கும்,இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இந்த முகாந்திரத்தின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை பயிற்சியாளர் வில்சன் டேனியலை பொது இடத்தில் வைத்து இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் ஜாடை,மாடையாக தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியள வில் இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வெளியே வா,வெளியே வா என்று கூச்சலிட்டபடி  அத்துமீறி உடற்பயிற்சிக் கூடத்திற்கு நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.இதன் காரணமாக உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த நபர்கள் சிதறி வெளியேறியுள்ளனர்.
இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இக்கும்பலின் ஒருதரப்பினரான சந்தோஷ்,கார்த்தி,தமிழ், குட்டிவிஷ்வா, அருண், ஆறுச்சாமி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பயிற்சியாளர் வில்சன் டேனியலை சூழ்ந்து கொண்டு மிரட்டியுள்ளனர்.அப்போது வெளியே இருந்து யாரும் உள்ளே வந்திராதபடி மற்றொரு தரப்பினர் சினிமாவில் ரவுடிக் கும்பல் அணிவகுத்து நிற்பதைப் போல் வழியை ஆக்கிரமித்து நின்றுள்ளனர்.பயிற்சியா ளர் வில்சன் டேனியலை சூழ்ந்து கொண்டிருந்த கும்பல் திடிரென அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.இக்காட்சிகள் யாவும் அங்கு சம்பவம் நிகழ்ந்தபோது எடுக்கப்பட்ட காணொலிக் காட்சி பதிவுகள் மூலம் தெரியவருகிறது.
இந்து முன்னணி என்ற ரவுடிக் கும்பலால் தாக்கப்பட்ட "ஜிம்" பயிற்சியாளர் வில்சன் டேனியலுக்கு தலையில் பலத்த அடிபட்டதில் அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் அளித்த புகாரைப் பெற்றுக் கொண்ட திருமுருகன்பூண்டி காவல்துறையினர் இச்சம்ப வத்தில் தொடர்புடைய இந்து முன்னணியைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களில் 10 பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்து சந்தோஷ், ஆறுச்சாமி என்ற 2 பேரை மட்டுமே கைது செய்து உள்ளனர்.மற்றவர்களை தேடி வருவதாக கூறி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு நன்கொடை தரவில்லை என்ற காரணத்திற்காக கடந்த 5.9.2019 அன்று திருப்பூர் அங்கேரிபாளை யம் சாலை ஜீவா காலனியிலுள்ள வீ.கே.கார்மெண்ட்ஸ் என்ற பின்னலாடை நிறுவனத்திற்குள் புகுந்து இந்து முன்னணி என்ற அமைப்பைச் சார்ந்த 60-க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.உடைமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள்,அரசியல் சார்பற்ற அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரண்டு "இந்து முன்னணி என்ற அமைப்பை தடை செய்யவேண்டும்" என்ற ஒற்றை முழக்கத்தோடு இருபெரும் ஆர்ப்பாட்டங்களை திருப்பூரில் நடத்தியுள்ள நிலை யில் மீண்டும் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதி அம்மன் நகரில் 30-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் உடற்பயிற்சிக் கூடத்திற்குள் புகுந்து சேதம் விளைவித்து,பயிற்சியாளரைத் தாக்கியுள்ள இச்சம்பவம் "இந்து முன்னணியை தடை செய்யக் கோரி" தொடர் போராட்டத்தை திருப்பூரில் தோற்றிவிக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல!!

Wednesday, November 13, 2019

இந்தியாவில் காற்று மாசால் இதய பாதிப்பு, பக்கம் வாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்!

டில்லியில் காற்று தர குறியீடு 500க்கும் மேல் உள்ளது.  இது மித அளவை விட 5 மடங்கு அதிகம்.  பஞ்சாப், அரியானா மாநிலங்களில் காய்ந்த பயிர்களை எரிப்பதால் 40 சதவீதமும், டில்லியில் கட்டுமான பணிகள், இடிக்கும் பணிகள் மற்றும் குப்பைகளை எரிப்பதால் 60 சதவீதமும் காற்று மாசு ஏற்படுகிறது என்று டில்லி அரசு தரப்பில் கூறப்பட்டது.
டில்லியில் காற்று மாசு அதிகரித்து இருப்பது தொடர்பாக டில்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்குஉச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களை கொண்ட நாடான இந்தியாவில் காற்று மாசுபாட்டால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு பற்றி ஸ்பெயின் நாட்டில் உள்ள உலக சுகாதார பார்சிலோனா அமைப்பின் குழுவினர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக அய்தராபாத் மற்றும் தெலுங்கானாவின் புறநகர் பகுதிகளை ஒட்டிய இடங்களில் 3,372 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில், பக்கவாதம் அல்லது இதய பாதிப்பு போன்ற கார்டியோவாஸ்குலார் வியாதிகள் ஏற்படும் ஆபத்து மக்களிடம் அதிக அளவில் உள்ளது தெரிய வந்தது.  ஏனெனில், காற்று மாசுபாட்டால், இதயத்தின் தமனிகள் தடிமன் அடைந்து விடும்.  இது சி.அய்.எம்.டி. குறியீடு என அளவிடப்படுகிறது.
இந்த காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சி.அய்.எம்.டி. குறியீடு அதிக அளவில் இருந்துள்ளது.
காற்றில் மாசுபாடு ஏற்படுத்தும் நுண்துகள்களின் அளவு பற்றிய உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ள அதிகபட்ச அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் ஆகும்.  ஆனால் இந்தியாவில் ஆண்டு சராசரி அளவானது ஒரு கன சதுர மீட்டருக்கு 32.7 மைக்ரோ கிராம் என்ற அளவில் இந்தியாவில் உள்ளது.
இந்த ஆய்வு முடிவில் சி.அய்.எம்.டி. குறியீடானது, கார்டியோமெட்டாபாலிக் ஆபத்து காரணிகளை கொண்ட அல்லது 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் அதிகம் உள்ளதும், மர கட்டைகள் போன்றவற்றை சமையல் எரிபொருளாக பயன்படுத்தும் பெண்களிடம் அதிகம் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதனால் உயர் ரத்த அழுத்தம், டையாபடீஸ் மற்றும் உடல்பருமன் போன்ற நோய் தாக்கங்கள் ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து உள்ளது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

Thursday, November 7, 2019

குரூப்-2 தேர்வு: புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு பட்டதாரி இளைஞர்கள் போராட்டம்

புதிய தேர்வு நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலு வலகத்தை முற்றுகையிட முயன்ற பட்டதாரி இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனைத்தொடர்ந்து அவர்கள் மனு அளித்துச் சென்றனர்.
சென்னை பார்க் டவுனில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) அலுவலகத்தை முற்றுகை யிடுவோம் என்று பட்டதாரி இளைஞர்கள் சார்பில் அறிவிப்பு வெளியானது. இதனைத்தொடர்ந்து அலுவலகம் மற்றும் அச்சாலை முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டனர்.
இந்தநிலையில் நேற்று பகல் 12 மணிக்கு கிராமப்புறங்களை சேர்ந்த பட்டதாரி இளைஞர்- இளம்பெண்கள் நூற்றுக்கணக்கானோர் கையில் மனுக்களுடன் ஊர்வலமாக டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் நோக்கி வந்தனர். முற்றுகையில் ஈடுபட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயே அமர்ந்து முழக்கமிட்டனர். பின்னர் ஊர்வலமாக வந்தவர்களில் 4 பேர் மட்டும் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் சென்று, அங்குள்ள அதிகாரி களிடம் மனு அளித்துவிட்டு சென்றனர். இதுகுறித்து பட்டதாரி இளைஞர் செந்தில்முருகன் என்பவர் கூறியதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கும் புதிய பாடத்திட்டம் ஏழை மாணவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே வருடத்துக்கு டி.என்.பி.எஸ்.சி. 4 தேர்வுகள் நடத்தி கொண்டிருந்தது. தற்போது அதையும் ஒருங்கிணைந்த தேர்வாக நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
முதல்நிலை தேர்வில் இருந்த 100 கேள்விகள் முற்றிலும் நீக்கி, புதிய பாடத்திட்டத்தில் 8 மற்றும் 9-வது யூனிட்களில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்போம் என்கிறார்கள். முதன்மை தேர்வில் ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. இது ஆங்கில வழி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவே உள்ளது. இந்த நடைமுறைகளை எதிர்த்தும், பழைய பாடத்திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த கோரியும் மனு அளித்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.