Thursday, October 17, 2019

நிலவில் பயிர்ச்செய்கை

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சீனாவும் நிலவிற்கு விண்வெளி ஓடத்தினை அனுப்பியிருந்தது.இதில் புதிய முயற்சி ஒன்றினையும் சீனா மேற்கொண்டிருந்தது.அதாவது 2.6 கிலோ கிராம் எடை உடைய சிறிய உயிர்க்கோளம் ஒன்றினையும் வைத்து அனுப்பியிருந்தது.
குறித்த உயிர்க் கோளத்தில் பருத்தி விதை, தக்காளி விதை, ஈஸ்ட், பழ ஈக்களின் முட்டை,   எனப்படும் களை மற்றும் எண்ணெய் வித்துக்கள் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த வித்துக்களை நிலவில் முளைக்க வைத்து பார்ப்பதே சீன ஆராய்ச்சியாளர்களின் நோக்கமாக இருந்தது.எனினும் தற்போது பருத்தி விதை மாத்திரம் முளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ் விதையிலிருந்து ஒரு இலை மாத்திரம் வெளிவந்துள்ளதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட் டுள்ளது.
டைனோசர் மீன்
நார்வேயில் உள்ள மீன் பிடிக்கும் நிறுவனங் களுக்கு வழிகாட்டியாக இருப்ப வர் ஆஸ்கர். கடலில் எந்த இடத்தில் தூண்டில் வீசினால் மீன்கள் கிடைக்கும் என்று இவரால் துல்லியமாகச் சொல்ல முடியும். அதனால் மீன் பிடிப்பவர்களுக்கு மத்தியில் இவருக்கு செம மவுசு. சமீபத்தில் இவர் பிடித்த மீன் ஒன்று இணையத்தில் ஹாட் வைரலாகி விட்டது.  அந்த மீனின் தோற்றம் டை னோசர் வடிவில் இருப்பதால் டைனோசர் மீன் என்று அதனை அழைக்கின்றனர். கடலின் 800 மீட்டர் ஆழத்துக்குள் இந்த மீன் கிடைத் திருக்கிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.