Saturday, October 5, 2019

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இருக்கை’ அமைக்க இந்திய-அமெரிக்கர்கள் உறுதி

அமெரிக்கா வின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் ‘தமிழ் இருக்கை’ அமைப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட இந்திய-அமெரிக்கர்கள் தொண்டு நிறுவனம் சுமார் ரூ. 14 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றும், உலகம் முழுவதும் 7 கோடி மக்களுக் கும் அதிகமானோர் பேசும் மொழியுமான தமிழை அனை வரும் படிக்க வேண்டும் என் பதை நோக்கமாகக் கொண்டு ஹூஸ்டன் பல்கலைக்கழகத் தில் தமிழ் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இருக்கையை அமைப்ப தற்காக கடந்த ஆண்டு ‘ஹூஸ்டன் தமிழ் இருக்கை’ என்ற தொண்டு நிறுவனம் அமெரிக்காவில் ஏற்படுத்தப் பட்டது.
பல்கலைக் கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹூஸ்டன் பல்கலைக்கழ கத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக, ஹூஸ்டன் தமிழ் இருக்கை தொண்டு நிறுவனத்தை நிறுவிய அமெ ரிக்காவில் வசிக்கும் தமி ழர்கள் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், சொக்கலிங்கம் நாராயணன் ஆகியோர், டெக்சாஸ், ஹூஸ்டன் உள் ளிட்ட பகுதிகளில் நிதி திரட் டும் பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். சுமார் ரூ. 14 கோடி நிதி திரட்டி பல் கலைக்கழகத்துக்கு அளிப்ப தாக உறுதியளித்துள்ளனர். இந்த நிதி மூலம், தமிழ் மொழி குறித்த ஆய்வுப் பணிகள் உள் ளிட்டவைக்கான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.