Tuesday, October 1, 2019

மைசூர் கல்வெட்டுத்துறையிடம் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக்கோரி வழக்கு

தமிழகத் தில் கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்கள், புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து மத்திய தொல் லியல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த மணி மாறன் தாக்கல் செய்த மனு: கருநாடக மாநிலம், மைசூரு வில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்  கல்வெட்டுத்துறை  உள்ளது.
அங்கு இந்தியாவில் உள்ள பழைமையானக் கல்வெட் டுகள் மற்றும் வரலாற்று ஆவ ணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் உள் ளிட்ட படிம ஆவணங்கள் தமிழர்களின் வரலாற்றை அறிவியல் பூர்வமாக உறுதிப் படுத்துவதற்கு ஆதாரமாக உள்ளன.
மேலும், அங்கு தமிழக கல்வெட்டுகளின் படிமங்கள் (இன்ங் காப்பி எடுத்து) ஆவணப்படுத்தி வைக்கப் பட்டுள்ளன.
இந்நிலையில், மைசூரில் உள்ள கல்வெட்டுத் துறை அலுவலகத்தை பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்துக்கு மாற்றிய போது, பழைமையான தமிழ் கல்வெட்டுகளின் படிம ஆவ ணங்களில் பெரும்பாலானவை சேதமடைந்துவிட்டன.  அங்குள்ள கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்களை முறையாகப் பாதுகாத்து, புத்தகமாகப் பதிப்பிக்கவும், மின்னணு முறையில் ஆவ ணப்படுத்தி பராமரித்திருக்க வேண்டும்.
ஆனால், மைசூரில் வைக் கப்பட்டிருந்த தமிழகம் தொடர்பான ஆவணங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வில்லை.
இதனால், தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம் வருங் காலத் தலைமுறையின ருக்குத் தெரியாமல்போகும் நிலை உள்ளது. எனவே,  மைசூர் கல்வெட்டுத் துறையிடம் உள்ள தமிழ் கல்வெட்டுப் படிமங்களை, தமிழக தொல் லியல் துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் கொண்ட அமர்வில்  புதன்கிழமை விசா ரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தமிழக கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட படி மங்கள், புராதனச் சின்னங் களைப் பாதுகாக்க, புதுப்பிக்க எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து மத்திய தொல் லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக் டோபர் 22 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.