Tuesday, October 22, 2019

‘தினமலரின்' சிறுமைப்புத்தி!


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பேச்சை வெளியிட்டு, அதற்கு மேலே தனது கருத்தை ‘தினமலர் திரிநூல்' பதிவு செய்துள்ளது.
எந்தக் காரணமாக இருந்தாலும் சிறைக்கு ஒருவர் செல்வது அவமானமாம் - சொல்லுகிறது ‘தினமலர்'.
இதனைப் படித்தால் கோவணம் கட்டாத கோலி விளையாடும் சிறுவன்கூட வாயால் சிரிக்கமாட்டான்.
கொலைக் குற்ற வழக்கில் சிறைக்குச் சென்றார்களே காஞ்சீபுரம் இரண்டு சங்கராச்சாரிகள்; அதைப்பற்றி அவ்வாறு ‘தினமலர்' எழுதியதுண்டா?
விடுதலைப் போராட்டத்துக்காக சிறை சென்றவர் களையும் கொச்சைப்படுத்துகிறதா ‘தினமலர்?' வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு இருமுறை சிறை சென்றாரே தந்தை பெரியார், அதுவும் ‘எந்தக் காரணமாக இருந்தாலும்' என்ற தலைப்பின்கீழ் வருமா?
‘தினமலர்' கிருஷ்ணமூர்த்திமீதான வழக்கில் அவர் சிறை சென்றால், அவரும் அந்த இரகத்தில்தான் வருவாரா?
இன்றைய மத்திய உள்துறை அமைச்சர் ‘என்கவுண்ட்டர்' வழக்கில் சிறைக்குள் சென்றாரே அப்பொழுதெல்லாம் இதுபோல ‘தினமலர்' எழுதியதுண்டா?
‘மிசா'வில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்மீது கொண்ட காழ்ப்பால் ஒட்டுமொத்தமாக சிறை சென்ற அனைவரையும் சிறுமைப்படுத்தும் பார்ப்பன ‘தினமலரை' அடையாளம் காண்பீர்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.