Saturday, October 5, 2019

பழுதடைந்த பள்ளியை சீரமைத்துத் தரக்கோரி 6 வயது மாணவி தொடர்ந்த பொதுநல வழக்கு

பழுத டைந்த பள்ளியை சீரமைத்து தரக் கோரி 6 வயது மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன் றத்தில் திருவள்ளூர் மாவட் டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி முத்தரசி மற்றும் அவரது தந்தை பாஸ்கரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
கடந்த 1964-ஆம் ஆண்டு மீஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப் பட்டது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாண விகள் படித்து வருகின்றனர். என்னுடைய மகளை இந்தப் பள்ளியில் சேர்த்தேன். ஆனால் இந்த பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்பதற் கான சூழல் இல்லை. பள்ளியின் கட்டடத்தைச் சுற்றி பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன.
பள்ளி அருகே அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிச்சை எடுப் பவர்கள் பள்ளிக்கூடத்தில் ஓய்வு எடுக்கின்றனர்.
மேலும் பள்ளியில் சுகா தாரமற்ற சூழல் நிலவி வரு கிறது.
இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பள்ளியின் கட்டடங்களும் பழுதடைந் துள்ளது.
இதனை சரி செய்யக் கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், கல்வி அதிகாரி களுக்கு புகார் மனு அளித் தோம். ஆனால் அந்த மனுவின் மீது இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பள்ளியை சீர மைத்து, பள்ளியைச் சுற்றி யுள்ள ஆக் கிரமிப்புகளை அகற்றி, பள்ளி வளாகத்தை சுத்தமாகவும் ,சுகாதாரமாகவும் பராமரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசா ரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் முனு சாமி, பள்ளியை சீரமைக்க தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து வழக் கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக விரி வான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர விட்டு விசாரணையை வரும் அக்டோபர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அந்த விசாரணையின் போது திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உள்ளிட்ட கல்வித்துறை அதி காரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.