Thursday, October 10, 2019

ஈரானில் மைதானத்துக்கு சென்று கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு அனுமதி

ஈரானில் ஆண்கள் பங்கேற்கும் கால் பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத் துக்கு சென்று பார்க்க பெண் களுக்கு அனுமதி கிடையாது. இதனை மீறும் பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறை யில் அடைக்கப்படுவார்கள். 1981ஆம் ஆண்டு முதல் இந்த தடை அங்கு அமலில் இருக்கிறது.
இந்த நிலையில் சஹர் கோடயாரி என்ற இளம் பெண் கடந்த மார்ச் மாதம் தெக்ரானில் நடைபெற்ற கால்பந்து போட்டியை காண ஆண் வேடமிட்டு மைதா னத்துக்குள் நுழைய முயன் றார். ஆனால் மைதானத்தின் காவலாளிகள் அவரை அடையாளம் கண்டதால் கைது செய்யப்பட்டார்.
இது ஈரான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது. சஹர் கோடயாரிக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தன.
இந்த நிலையில், சஹர் கோடயாரி மீதான வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் 12ஆம் தேதி நடந்தது. வழக்கில் சஹர் கோடயாரி குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டால் அவருக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று பேசப்பட்டது. இத னால் அச்சமடைந்த அவர் நீதிமன்றத்துக்குள்ளேயே தீக்குளித்து இறந்தார்.
இது ஈரான் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற் படுத்தியதோடு, விளையாட்டு மைதானங்களில் பெண்களை அனுமதிக்க கோரிய போராட் டமும் வலுப்பெற்றது. பல் வேறு கால்பந்தாட்ட அமைப் புகள் பெண்களுக்கு எதிரான ஈரானின் இந்த நடவடிக் கைக்கு கண்டனம் தெரிவித்தன.
மேலும் பன்னாட்டு கால் பந்தாட்ட அமைப்பு, ஈரான் தனது முடிவை திரும்பப் பெற்று பெண்களை மைதா னத்துக்குள் அனுமதிக்க வேண்டும் இல்லையென்றால் ஈரான் அணி நீக்கப்படும் என் றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் ஈரானில் கால்பந்தாட்ட போட்டி களை மைதானங்களுக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள் ளது. சமூக செயல்பாட்டாளர் கள் மற்றும் பெண்ணியவாதி கள் இதனை வரவேற்று உள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.