Tuesday, October 1, 2019

நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சியில் சரிவு

நாட்டின் முக்கியமான எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், 0.5 சதவீதமாக சரிந் துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில், 4.7 சதவீத மாக அதிகரித்திருந்தது.
நடப்பு ஆண்டின், ஆகஸ்ட் மாதத்தில், முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, 0.5 சத வீதமாக குறைந்துள்ளது. நிலக் கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி சரிவு ஏற்பட்டதால், இந்த வளர்ச்சி குறைவு ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய எட்டு துறைகளாக குறிப் பிடப்படுகின்றன.
பங்களிப்பு:  இவை, நாட்டின் தொழில்துறை உற்பத்தியை கணக்கிடுவதில், 38 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.நடப்பு ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், 0.5 சதவீதம் சரிவு ஏற்பட்டு உள்ள நிலையில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதத் தில் வளர்ச்சி, 4.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நிலக்கரி உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 8.6 சதவீதமாக குறைந் துள்ளது. இதுபோலவே, இயற்கை  எரிவாயு உற்பத்தியும், மைனஸ், 5.4 சதவீதமாகி உள்ளது.
கச்சா எண்ணெய், சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச் சியும் முறையே, மைனஸ், 3.9 சதவீதம், 4.9 சதவீதம், 2.9 சதவீதம் என, குறைந்துவிட்டது.
இந்த அய்ந்து துறைகளில் ஏற்பட்ட உற்பத்தி வளர்ச்சி பாதிப்பு, மொத்த உள்கட்ட மைப்பு துறைகளில் சரிவை கொண்டுவந்து சேர்த்துள்ளது.
உருக்கு உற்பத்தி: இருப் பினும், உரம் உற்பத்தி, 2.9 சதவீதம் அளவுக்கு அதிகரித் துள்ளது. அதேபோல், உருக்கு உற்பத்தியும், 5 சதவீதம் அள வுக்கு அதிகரித்திருப்பதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஏப்ரல் முதல், ஆகஸ்ட் வரையிலான காலகட் டத்தில், முக்கிய எட்டு துறை களின் உற்பத்தி வளர்ச்சியானது, 2.4 சதவீதம் அளவுக்கு வளர்ச் சியை கண்டுள்ளது.இதுவே, கடந்த ஆண்டு, இதே கால கட்டத்தில், 5.7 சதவீதமாக அதி கரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன் வாங்க திட்டம்: நடப்பு நிதியாண்டின், இரண் டாவது அரையாண்டில், 2.68 லட்சம் கோடி ரூபாயை, அரசு கடனாக வாங்க இருப்பதாக, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அதானு சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.