Monday, October 7, 2019

ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகள்: புதிய செயலி மூலம் கண்காணிக்க முடிவு

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்றல் செயல்பாடுகளை செல்லிடப்பேசி செயலி மூலம் கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.
இந்த செயலி முதல்கட்டமாக சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம் படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித் துறைபல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தி வருகிறது. இதற்காக மாநிலப் பாடத் திட்டத்தின் கற்றல் முறைகளில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வகுப்பறை களில் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பதை செல்லிடப்பேசி செயலி மூலம் கண்காணிக்கும் முறையை கல்வித்துறை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை முறையில் சென்னை, திருவண் ணாமலை மாவட்டங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியர்கள் கற்றல் திறன்களை மேம்படுத்தவும், கண்காணிக்கவும் புதிதாக செல்லிடப்பேசி செயலி உருவாக்கப் பட்டுள்ளது.
இதன்மூலம் வகுப்பறைகளில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் எழுப்பிய கேள்விகள், சந்தே கங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரித்தல், செயல் வழிக் கற்பித்தல் உள்பட பல்வேறு பிரிவு களின்கீழ் ஆசிரியர்கள் தினமும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு தெரியப்படுத்துவர். பள்ளி ஆய்வின்போது இந்த செயலியில் பதி வேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப் படையில் ஆசிரியாகளின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும்.
சோதனை அடிப்படையில் சென்னை, திரு வண்ணாமலை மாவட்டங்களில் அமலாகி யுள்ளது. அதன் குறைகளை சரிசெய்து, விரை வில் மாநிலம் முழுவதும் நடை முறைப்படுத் தப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.