Monday, October 7, 2019

என்னே அவலம்!

பராமரிப்பு இல்லாமல் மூடப்படும் கிராமப்புற நூலகங்கள்
சிறீபெரும்புதூர்,அக்.7, காஞ்சி மாவட்டத்தில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் தொடங் கப்பட்ட கிராமப்புற நூலகங்கள் பராமரிப்பு இல்லாமல் முடங்கி யுள்ளன. சில நூலகங்கள் மூடப் படுவதால் இளைஞர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த, 2006ஆம் ஆண்டு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பல கிராமங்களில் நூலகங்கள் அமைக்கப்பட்டு பரா மரிக்கப்பட்டு வந்தன. இந்த நூலகங் களால் கிராமப்புற மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயனடைந்து வந்தனர். போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளதால், கிராமப்பகுதி இளைஞர்கள் பயன டையும் வகையில் இது அமைந்தது. படித்த, மூத்த வயது கொண்ட ஒருவரை ரூ.1,500 மாதச் சம்பளத்துக்கு  நியமித்து நூலகங்கள் பாரமரிக்கப் பட்டு வந்தன. அண்மைக்காலமாக நூலகங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. உரிய பராமரிப்பு இல்லாததால் பெரும்பா லான கிராமப்புற நூலகங்கள் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இயங்கும் நூலகங்கள் உரிய பராமரிப்பின்றி திறக்கப்படாமல் புத்தகங்கள் மட்கி வருகின்றன. சில இடங்களில் சமூக விரோத கும்பல்களின் கூடாரமாக வும் நூலகங்கள் மாறியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 633 ஊராட்சி களிலும் நூலகங்கள் தொடங்கப்பட்டு, தற்போது அதில், 50 விழுக்காடு மட்டுமே அறை குறையாக இயங்கி வருகின்றன. கிராம மக்களிடையே புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தவும், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்துகொள்ளவும் உருவாக்கப் பட்ட நூலகங்கள் பராமரிப்பின்றி கிடப்பதால் யாருக்கும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக இளை ஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நூலகத் துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் கூறிய தாவது:
கிராம ஊராட்சிகள் சார்பில் நடத்த முடியாத நூலகங்களை எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் நடத்திக் கொள் கிறோம் என ஊராட்சி ஒன்றிய நிர்வாகங் களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பி யுள்ளோம். சில பகுதியில் எங்களிடம் ஒப் படைத்துள்ளனர். அவற்றை நாங்கள் பரா மரித்து வருகிறோம்.
பல கிராமங்களில் ஒப் படைக்க வில்லை, அவர்களும் சரிவர பரா மரிப்பதில்லை. ஊராட்சி நிர்வாகம் செய்யும் தவறால், நூலகத் துறை மீது குற்றச்சாட்டு எழுகிறது என்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.