Tuesday, October 1, 2019

குழந்தைத் திருமணத்துக்கு எதிராக போராடிய இந்திய சிறுமிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது


குழந்தைத் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறைகளை எதிர்த்து போராடியதற்காக, ராஜஸ்தானைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் "சேஞ்ச்மேக்கர்' (மாற்றத்துக்கு வித்திட்டவர்) விருது வழங்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள ஹின்ஸ்லா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி பாயல் ஜாங்கிட் (17). அவருடைய கிராமத்தில் நிலவிய குழந்தைத் திருமண முறை, குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார். அவரது கிராமத்துக்கு அரு கில் இருந்த சில கிராமங்களிலும் இந்தப் பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார். அதனால் அந்த பகுதிகளில் பல குழந் தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டன. பாயலின் இந்தச் செயலை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில், அய்.நா. துணை பொதுச் செயலர் அமினா ஜெ. முகமதுவிடம் இருந்து "சேஞ்ச்மேக்கர்' விருதை பாயல் ஜாங்கிட் பெற்றுக் கொண்டார்.
விருது பெற்ற பின் பாயல் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் பல பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக பெண் குழந்தை களை வெளியே அனுப்பி படிக்க வைக்க மாட்டார்கள். அவர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவர். எனக்கும் சிறுவயதிலேயே திரு மணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அப்போது, சமூக ஆர் வலர் ஒருவரை அணுகி, எனது தந்தையை சமாதானம் செய்தேன். அதையடுத்து, குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கோரியும், பல பேரணிகள், போராட் டங்களை நடத்தினோம். ஒவ்வொரு வீடாக சென்று அனைவரிடத்திலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்க்கையை உயர்த்துவதற்கான வாய்ப்பை பெற்றோர் ஏற்படுத்தி தர வேண்டும்' என்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.