Wednesday, October 23, 2019

பாரத் பெட்ரோலியம் விற்கப்படுவதன் பின்னணி..!


இந்திய அரசை பின்னால் இருந்து இயக்கும் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தும், சமீப காலமாக அதன் அடித்தளமே ஆட்டம்காண தொடங்கியிருக்கிறது அம்பானி குழுமத்திற்கு.
என்றாலும்.. அதை தூக்கி நிறுத்த தன்னால் இயன்ற மட்டும் முட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு.
தொடர்ந்து எட்டாவது முறையாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக முடிசூட்டியிருக்கும் முகேஷ் அம்பானிக்கு இந்திய மற்றும் வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன் தொகை நான்கு லட்சத்து எண்பத்தி ஆறாயிரம் கோடி! (4,86,000 கோடி)
கிரெடிட் ஸ்யூஸை (Credit Suisse) என்ற நிதிநிலை மதிப்பிடும் பன்னாட்டு நிறுவனம் இனி அம்பானி குழுமத்துக்குக் கடன் கொடுப்பது ஆபத்து என்று அறிவித்ததோடு தன்னுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் துணை வங்கிகளும் இனி இவர்களுக்குக் கடன் தரமாட்டார்கள் என்று அறிவித்து விட்டது.
இந்த நிலையில்தான் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவூதி அரேபியாவின் ஆரெம்கோ (Aramco)  நிறுவனம் ரிலையன்ஸில் 20 சதவீத பங்குகளை வாங்குவதோடு கொஞ்சம் முதலீடும் செய்ய முடிவெடுத்துள்ளது.  அதாவது கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஆரெம்கோ நினைத்துள்ளது.
ஆரெம்கோவின் சொத்து மதிப்பான USD 1.1 Trillion-னோடு ஒப்பிடுகையில் அது அவர்களுக்கு சில்லரைக்காசு.    என்றாலும் இப்போது ரிலையன்ஸ் குரூப்பின் எந்த கம்பெனியுமே பெரிதாய் லாபம் ஈட்டும் நிலையில் இல்லை என்பதால் ஆரெம்கோ நிறுவனம் கொஞ்சம் தயங்கியது. இங்குதான் அம்பானியின் குள்ளநரித்தனமும், அரசின்மேல் அவருக்கிருக்கும் வலுவான பிடியும் வெளிப்படு கிறது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமி டெட்டை ரிலையன்சுக்கு விற்று விட்டால் ரிலை யன்ஸ் குழுமம் இன்னும் வலுப்பெறும். பாரத் பெட்ரோலியத்தின் மதிப்பு நான்கு லட்சம் கோடியைத் தாண்டும்.
நான்கு ரிஃபைனரீஸ், சிறிய மற்றும் பெரிய எண்ணெய் கிணறுகள் 100, பதினைந்துக்கு மேற் பட்ட எண்ணெய் சேமிக்கும் முனையங்கள், கிட்ட தட்ட பத்து ஸ்டேட் அலுவலகங்கள், அறுபதுக்கும் மேற்பட்ட டெரிட்டரி அலுவலகங்கள், 16,000-க்கும் அதிகமான பெட்ரோல் பங்குகள், அதிகாரிகள் குடியிருப்புகள் என நிறைய சொத்து மதிப்புடையது பாரத் பெட்ரோலியம்.
இதனுடைய மொத்த மதிப்பு நான்கு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்பது தோராய கணிப்பு!
இந்த நிறுவனத்தின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 54% பங்குகளின் மதிப்பு என்பது கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது அரசு. அதே வேளை, இந்த பங்குகளை வெறும் நாற்பதா யிரம் கோடிக்கு ரிலையன்சுக்கு விற்க முடிவெ டுத்துள்ளது.
ஆரெம்கோ நிறுவனம் ஒரு லட்சத்து அறுபதா யிரம் கோடியை ரிலையன்சுக்கு தனியாக தந்து விடும்.  ரிலையன்சும் தன்னுடைய கடனை வெகு வாக குறைத்துவிடும்.  இப்போது ரிலையன்சுக்கு லாபம் ஈட்டும் நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் அமைந்து விடுவதால் ஆரெம்கோ  நிறுவனத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.
கணிசமான தொகை கட்சிக்கோ ஆள்ப வர்களுக்கோ போய் சேர்ந்து விடும்.
இதுதான் பாரத் பெட்ரோலியம் விற்கப்படுவதின் பின்னணி..!
இந்திய அரசுக்கு சொந்தமான, இந்திய மக் களின் சொத்தான, 1976இல் தேசிய மயமாக்கப்பட்ட, உலகின் மிகப்பெரிய பெட்ரோலியம் கம்பெனி களுள் ஒன்று சப்தமில்லாமல் தனியாருக்கு தாரைவார்க்கப்பட இருக்கிறது.
நல்ல அரசு பற்றி சொல்லும் வள்ளுவர்...
"அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு" என்பார்..!
அப்படியொரு அறநெறி பேணும் அரசு இனி என்றேனும் அமையுமா..?
(வாட்ஸ் ஆப் தகவல்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.