Monday, October 7, 2019

டிஸ்லெக்சியா எனும் வாசிப்புக் குறைபாடு

இவன் புத்திசாலியான ஒரு பையன், அறிவுத்திறனைப் பொறுத்தவரையில் இவன் யாருக்கும் சளைத்தவன் அல்ல. அவனது பேச்சும் சரளமாக உள்ளது. ஆனால், அவனால் வாசிக்க மட்டும் இயலாமல் உள்ளது. இவன் எழுத்திலும் எழுத்துப் பிழைகள் மிகையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, இவனால் 7 என்ற எண்ணை வாசிக்க முடியும், ஆனால் அதையே ஏழு என்று சொல் வடிவில் எழுதினால் வாசிக்க முடியவதில்லை. இவனுக்குக் கண் பார்வையில் கோளாறு எதுவுமில்லை.
இது, பிரிங்கல் மோர்கன் என்ற பொதுநல மருத்துவர் ஒருவர் தான் பார்த்த பெர்சி என்ற 14 வயதுப் பையனைப் பற்றி 1896-இல்    என்ற பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் எழுதிய அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் புகழ் பெற்ற வாசகங்கள்.
பாதிக்கப்படும் வாசிப்புத் திறன்
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மிகத் தீவிரமாக ஆராயப்பட்டு வந்துள்ள ஒரு வளர்ச்சிக் குறைபாடு டிஸ்லெக்சியா. இது குழந்தைகளில் காணப்படும் ஒரு மன வளர்ச்சிக் குறைபாடு. ஆனால், அறிவுத்திறன் குறைபாடு (முன்னாளில் இது மனவளர்ச்சிக் குறைபாடு என்று கருதப்பட்டது) என்ற வளர்ச்சிக் குறைபாட்டுக்கும் டிஸ்லெக்சியாவுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. டிஸ்லெக்சியா வாசிப்புத் திறனை மட்டுமே பாதிக் கிறது என்பதுதான் நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி.
இது மனநோய் அல்ல!
வாசிப்பதில் மட்டும் உள்ள குறைபாடா? இது எப்படிச் சாத்தியமாகும் என்ற வியப்பு பலருக்கு ஏற்படுவதுண்டு. சில மருத்துவர்களும் ஆசிரியர்களும் கூட டிஸ்லெக்சியாவைச் சரிவரப் புரிந்துகொள்வது இல்லை. அப்படி ஒரு குறைபாடே கிடையாது என்று வாதிடுபவர்களும் உண்டு. இந்தப் பாதிப்பு உள்ள குழந்தைகளின் நுண்ணறிவு  சராசரி அளவில் இருக்கும். பல அறிஞர் களுக்கு இந்த டிஸ்லெக்சியா பாதிப்பு இருந்ததாக அறியப்படுகிறது.
டிஸ்லெக்சியா ஒரு மன நோய் அல்ல என்பதையும் வலியுறுத்திக் கூற வேண்டும். டிஸ்லெக்சியாவுடன் எண்கணிதக் குறைபாடும் எழுத்துக் குறைபாடும் ஒட்டி வருவதுண்டு. இதனால் இதைக் கற்றல் குறைபாடு  என்று பொதுவாக அழைப்பதுண்டு.
ஒலியே பிரச்சினை
டிஸ்லெக்சியாவைச் சரிவரப் புரிந்துகொள்வது முக்கியம்.. அன்றாடப் பேச்சு மொழியில் உள்ள சொற்களின் ஒலிகளைச் சரியாக அடையாளம் காண இயலாமையே டிஸ்லெக்சியா வில் உள்ள அடிப்படைக் குறைபாடு. அதாவது இவர்கள் ஒரு பேச்சுச் சொல்லின் ஒலியன்களைப் பிரித்துச் சொல்லச் சிரமப்படுகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, கப்பல் என்ற சொல் /க/ /ப்/ /ப/ /ல்/ என்ற நான்கு ஒலியன்களைக் கொண்டது. ஆனால், இவர்களுக்கு அதை ஒலி பிரித்து அறிய முடிவது இல்லை.
எனவே, தாம் வாசிக்கும் சொல் என்னவாக இருக்கும் என்று ஊகித்துக் கூறுகிறார்கள். இதனால் இவர்கள் தப்புத் தப்பாக வாசிக்கிறார்கள், தயங்கித் தயங்கி வாசிக்கிறார்கள், மெல்ல மெல்ல வாசிக்கிறார்கள். ஒரு வரியை வாசிக்க இவனுக்கு ஒரு நாள் ஆகும் என்று ஆசிரியர்கள் அலுத்துக்கொள்வது உண்டு.
பாதிப்பை எப்படி அறியலாம்?
இவர்களின் எழுத்திலும் எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கும். இது ஒன்றே ஒரு மாணவனுக்கு டிஸ்லெக்சியா பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப் போதுமானது. டிஸ்லெக்சியா மொழி சார்ந்த ஒரு குறைபாடு என்பதால் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற மருத்துவச் சோதனைகள் தேவை இல்லை. மாறாக, வாசிப்பு - எழுத்துச் சோதனைகள் வழியாகவே இது அடையாளம் காணப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட ஒரு சோதனை வழியாக உறுதிசெய்ய முடியாது. டிஸ்லெக்சியாவுக்கு என்று முறைப்படியான தனி சோதனை இல்லை. பலவிதமான வாசிப்புத் திறன் சோதனைகளைக் கொண்டே டிஸ்லெக்சியா ஒருவருக்கு உண்டு என்று உறுதிபடக் கூற முடியும்.
இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கும்
* தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள் வராது
* மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டுவர நரம்பு பிரச்சினைகள் நீங்கும்
* வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர பித்தக் கோளாறு நீங்கும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.