Tuesday, October 1, 2019

ரிசர்வ் வங்கியை ஓட்டாண்டி ஆக்கும் மத்திய அரசு மேலும் ரூ.30,000 கோடி பெற முடிவு

நடப்பு நிதியாண்டுக்குள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மேலும் 30,000 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள நிலையில்...

நாட்டின் மொத்த உள்நாட்டு உற் பத்தி மிக மோசமான சரிவைச் சந்தித் துள்ள நிலையில், மத்திய அரசுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதற்காக ரிசர்வ் வங்கியின் உபரி நிதி ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு பெறுகிறது.
தொடர் பொருளாதார சரிவை சமா ளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை கட்டாயப்படுத்தி பெற்றது மத்திய அரசு. இந்த நிதி அவசரகாலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இதைப் பெற்ற பின்பும் கூட நிதி நிலைமை சரியாகவில்லை.

மேலும் 30,000 கோடி ரூபாய் கேட்க...

கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ரூ.28,000 கோடியை ஈவுத் தொகையாக வழங்கியது. 2017--2018 நிதி யாண்டில், 10,000 கோடி ஈவுத் தொகை யாக வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண் டில் 30,000 கோடி ரூபாய் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு இடைக்கால ஈவுத்தொகையாக ரூபாய் 25,000 கோடி முதல் 30,000 கோடி வரை பெறத் திட்ட மிட்டுள்ளது. இதுகுறித்து வரும் ஜனவரி மாதம் முடிவு செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டாண்டியாக்கும் செயல்

ஏற்கெனவே மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க எதிர்ப்பு தெரிவித்த ரகுராம் ராஜன், தீபக் மிஸ்ரா போன்ற ரிசர்வ் வங்கி ஆளுநர்கள், இதர பொரு ளாதார நிபுணர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் தற்போது உள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்து அப்பணம் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் மேலும் ரூ.30,000 கோடி கேட்பது ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதியை துடைத்து எடுத்து ஓட்டாண்டி யாக்கும் செயல் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.