Tuesday, October 1, 2019

கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் சென்னை கடலில் மூழ்கும் அபாயம்

கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் கொல்கத்தா, மும்பை, சூரத் மற்றும் சென்னை ஆகிய 4 இந்திய கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட் டுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான இடைநிலை அரசுக் குழு (அய்பிசிசி) எச்சரித்துள்ளது.
அய்நா.வின் காலநிலை மாறு பாடு குறித்து ஆய்வு செய்த அமைப் பான அய்பிசிசி., ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்த நூற்றாண்டின் இறுதியில் இமயலை வேகமாக உருகி கடல்நீர்மட்டம் வெகுவாக அதிகரிக்கும். இதனால் கொல்கத்தா, மும்பை, சூரத், சென்னை ஆகிய 4 நகரங்களில் மிக மோசமாக கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். அதே சமயம் வட இந்தியா வின் பல பகுதிகள் மிக கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள் ளும்.
இதற்கு முன் இருந்ததை விட கடல் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் 2100 ஆம் ஆண்டில் உலக அளவில் 1.4 பில்லி யன் மக்கள் பாதிக்கப்பபடுவார்கள். இந்திய அளவில் 4 கடற்கரை நகரங்கள் மட்டுமின்றி உலக அளவில் 45 துறைமுக நகரங்கள், 50 செ.மீ., வரை கடல்மட்டம் உயர்ந்து, வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அபாய நிலை அதிகரித்து வருவதால் தாழ்வான கடற்கரையோர நக ரங்கள், சிறிய தீவுகள் மோசமான அபாய நிலையில் உள்ளன.
மேலும் உலக வெப்பமயமாதலை குறைக்க அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் கடலின் வெப்பம் அதிகரித்து கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். உலக அளவில் கடல் உணவுகள் இல் லாமல் போகும். அதிக அளவில் புயல் சின்னங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. 1982ஆம் ஆண்டு முதல் 2016 வரை கடலின் வெப்ப நிலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.