Monday, October 21, 2019

அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு

நவீன தொழில் நுட்பங்கள், விஞ்ஞான கண் டுபிடிப்புகள் என இன்றைய உலகம் நவநாகரிகத்தோடு விளங்கினாலும், மனிதனின் தோற்றம் மற்றும் பழமை யான நாகரிகங்களை பற்றி அறிவதில் உலக நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வரு கின்றன. தமிழகத்தின் கீழடி முதல் உலக நாடுகள் அனைத் திலும் நடந்து வரும் தொல் பொருள் ஆய்வுகள் இதையே கட்டியம் கூறுகின்றன.
இந்த ஆய்வுகளில் அடிக் கடி கிடைக்கும் பழங்கால அரிய பொக்கிஷங்கள், அரசு களின் ஆவலை மேலும் தூண்டி விடுவதுடன், இத்தகைய ஆய் வுகளை மேலும் பரவலாக்கும் அவசியத்தையும் அளிக்கின் றன. அந்தவகையில் அய்க்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில் 8 ஆயிரம் ஆண் டுகள் பழமையான முத்து ஒன்று சமீபத்தில் கிடைத்து உள்ளது.
அங்குள்ள மறவா தீவில் பல ஆண்டுகளாக தொல் பொருள் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில் கற்கா லத்தை சேர்ந்த கற்சிற்பங்கள், பீங்கான் பொருட்கள், ஓடு மற்றும் கற்களால் செய்யப் பட்ட மணிகள் என ஏராள மான பழங்கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.
இதில் மிகப்பெரிய பொக் கிஷமாக, பழமையான முத்து ஒன்றும் சமீபத்தில் கிடைத் தது. உலகின் பழமையான முத்து என கருதப்படும் இந்த இயற்கை முத்து சுமார் 8 ஆயி ரம் ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. குறிப் பாக கி.மு.5800 முதல் 5600 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என கண்டறியப்பட்டு உள் ளது. அதாவது கற்காலத்தின் கடைசி பகுதியை சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித் தனர்.
இந்த முத்து கண்டுபிடிக் கப்பட்டதால், அமீரக தொல் பொருள் ஆய்வாளர்களிடம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. ‘அபுதாபி முத்து’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த முத்து, அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சிய கத்தில் (பாரீசில் உள்ள புகழ் பெற்ற அருங்காட்சியகத்தின் கிளை) 30ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.