Wednesday, December 22, 2010

பெரியார் திரை | கடைசி நாள் 27.12.2010 | விரைவீர்!

பெரியார் திரை குறும்படப் போட்டிக்கான வரவேற்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது.
இருப்பினும் போட்டி குறித்த அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து இறுதித் தேதி குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததாலும், வெளிநாடுகளிலிருந்து படங்களை அனுப்ப காலம் தேவை எனப் படைப்பாளிகள் வேண்டிக்கொண்டதாலும் வரும் திங்கள் கிழமை (27.12.2010) வரை இறுதிக் கெடு நீட்டிக்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் & நிபந்தனைகளுக்கு...சுட்டுக!


இவ்வாய்ப்பைத் தமிழ்க் குறும்பட படைப்பாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அமைப்பாளர்,
பெரியார் திரை

Friday, December 10, 2010

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம் - தாய், நாளைக்கு மழை பெய்யும்

பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம்
இணைந்து நடத்தும்
பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து இரண்டாம் ஆண்டாக நடத்தும் பெரியார் திரை குறும்படப் போட்டிக்காக குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்கான விதிமுறைகள்:
1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும்.
2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்(SUBTITLES) இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD குறும்படத்தின் இரண்டு பிரதிகள் அனுப்பப்பட வேண்டும்.
3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன.
6. போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். (அல்லது) போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
7. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் அனைத்தும் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை நடத்தும் திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்படும்.
8. குறும்படங்கள் 2008-2010 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
9. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
10. போட்டி முடிவுகள் விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும் செய்தியாக 2010 டிசம்பர் இறுதி / 2011 ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.
11. ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
12. தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.
13. விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை www.viduthalai.com, www.periyarthirai.blogspot.com ஆகியவற்றில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
14. போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.
15. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.
முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000
மேலும் சிறப்பு, ஊக்கப் பரிசுகள் உண்டு
நுழைவுக் கட்டணம் இல்லை.
அனுப்ப வேண்டிய முகவரி:
அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,
பெரியார் திடல்,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

மேலும் தொடர்புகளுக்கு:
செல்பேசி: 9444210999, 9940489230
periyarthirai@gmail.com

3-ஆம் ஆண்டு தொடக்க விழா & ”வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி” திரையிடல்..



பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை 3-ஆம் ஆண்டு தொடக்க விழா

12.12.2010 | ஞாயிறு மாலை சரியாக 5 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

தலைமை: வழக்கறிஞர் கோ.சாமிதுரை (பொருளாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: வீ.குமரேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை: பாண்டிராஜ் (திரைப்பட இயக்குநர்- ’பசங்க’, ’வம்சம்’)

சிறப்புரை: சு.அறிவுக்கரசு (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

அறிமுகவுரை: தி.பெரியார் சாக்ரடீசு (மாநிலச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்:
“வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி...”
(ஈழத்தின் முழு வரலாற்றைச் சொல்லும் ஆவணப்படம் - 2 மணி 45 நிமிடங்கள்)

இயக்கம்: சோமீதரன்

தயாரிப்பு: "Save Tamils Visual Media"

அனைவரும் வருக!

Thursday, September 9, 2010

மண்ணும் சிவந்தது, அட்சயம் திரையிடல்


பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை

10.09.2010 | வெள்ளி | இரவு 7 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல், சென்னை-7

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்:
மண்ணும் சிவந்தது
(ஈழப் போரின் இறுதி நாட்கள் குறித்த
குறும்படம்- 34 நிமிடங்கள்)
இயக்கம்: நீரோஜன்

அட்சயம்
குறும்படம்- 15 நிமிடங்கள்)
இயக்கம்: பி.என்.கணபதி

அனைவரும் வருக!

Wednesday, August 11, 2010

முல்லைத்தீவு சாகா - திரையிடல்



பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை

13.08.2010 | வெள்ளி | இரவு 7 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல், சென்னை-7

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்:
முல்லைத்தீவு சாகா
(ஈழப் போரின் இறுதி நாட்கள் குறித்த
ஆவணப்படம்- 46 நிமிடங்கள்)

இயக்கம்: சோமீதரன்

சிறப்பு அழைப்பாளர்:
செழியன்
(திரைப்பட ஒளிப்பதிவாளர்)

அனைவரும் வருக!

Wednesday, July 7, 2010

ஜூலை மாதத் திரையிடல்













பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
நாள்: வெள்ளிக்கிழமை (09-07-2010)
இடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7
நேரம்: இரவு 7 மணி
குறும்படங்கள் திரையிடல்
சமத்துவம் பேசினால்...
ம.தி.முத்துக்குமார் 10 நிமிடங்கள்
Missing Colors
பிரசன்னா கானாத்தூர் 25 நிமிடங்கள்
H 2 O
சூரியா 6 நிமிடங்கள்

மேலும் விபரங்கள் பெற:
99404 89230

Wednesday, June 9, 2010

ஒரு ஊரிலே... குறும்படம் திரையிடல் மற்றும் வெளியீட்டு விழா

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை

11.06.2010 | வெள்ளி | இரவு 7 மணி,
அன்னை மணியம்மையார் அரங்கம்
பெரியார் திடல், சென்னை-7


ஒரு ஊரிலே...
குறும்படம் திரையிடல் மற்றும் வெளியீட்டு விழா

வரவேற்புரை:
மா.ஆறுமுகம்
(பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)

குறுந்தகட்டை வெளியிடுபவர்:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் )

பெற்றுக் கொள்பவர்:
சோமீதரன்
(ஆவணப்பட இயக்குநர் )

பாராட்டுரை:
கோ.சுந்தரராஜன்
(பூவுலகின் நண்பர்கள் )

ஏற்புரை:
க.பொன்ராஜ்
(ஒரு ஊரிலே - குறும்பட இயக்குநர் )

நன்றியுரை:
பாலாஜி சண்முகம்
(ஒரு ஊரிலே - குறும்பட தயாரிப்பாளர் )

இணைப்புரை: ஏ.இராஜசேகர்
(பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை)

தொடர்பு எண்கள்:
9940489230, 9894124605

ஒரு ஊரிலே... குறும்பட வெளியீடு