Monday, September 2, 2019

மலச்சிக்கலைத் தவிர்க்க

போதுமான அளவு கரையும் அல்லது கரையா நார்ச்சத்துள்ள உணவான பழங்கள், காய்கறி, கீரை, முழுத் தானியங்கள், கொட்டைகள், முழுப் பயறு வகைகள் (பொதுவாக ஒரு நாளைக்கு 25-30 கிராம் அளவு). உணவுவழியாக எடுக்க முடியாதவர்கள் மருந்துக் கடைகளில் கிடைக்கும் நார்ச்சத்துத் துணை உணவை மருத் துவர் ஆலோசனைப்படி உட்கொள் ளலாம்.
பட்டை தீட்டப்பட்ட, பாலிஷ் போடப்பட்ட, பட்டி டிங்கரிங் செய்யப் பட்ட, பதப்படுத்தப்பட்ட, மேக்கப் போடப்பட்ட, வேதிப்பொருட்களால் குளிப்பாட்டப்பட்ட உணவு வகைகள், துரித உணவு, எண்ணெயில் பொரித்த உணவு, பேக்கரி தின்பண்டங்கள் ஆகியவற்றின் மீதான ஆர்வம் மலச்சிக்கலை மேலும் சிக்கலாக்கும்.
தினசரி இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துவதை உறுதிசெய்து கொள் ளுங்கள்
தேவை கூடுதல் கவனம்
# அளவுக்கு மீறிய நார்ச்சத்தும் நல்லதல்ல. அதாவது, தினசரி 50 கிராமுக்கு அதிகமாக
# நீங்களாகவே கடைகளில் மல மிளக்கிகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள், எனிமா கொடுத்துக்கொள்ளாதீர்கள்
தவிர்க்க வேண்டியவை
அதிக அளவு வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தும் கீழ்க்காணும் உணவு வகைகளை முதுமையில் குறைத்துக் கொள்ளுங்கள்
# அவரை போன்ற கொட்டை வகைகள்
# காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பிராக்கேலி, வெங்காயம், காளான், தண்ணீர்விட்டான் கிழங்கு.
# பழங்கள்: ஆப்பிள், பேரிக்காய் வகைகள்.
# முழுத் தானியங்கள்: கோதுமை, தவிடு அதிகம் கொண்ட உணவு வகைகள்
#சோடா, பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்கள்
# பால், பால் சார்ந்த பொருள்கள்: பாலாடைக் கட்டி, பனீர், பனிக்கூழ், கெட்டித் தயிர்.
# சர்க்கரை, செயற்கை இனிப்பு
முதுமையில் மலச்சிக்கல் பெரும் துயரத்தைத் தரும். அதற்கான சரியான காரணத்தைத் தகுந்த பரிசோத னையுடன், உரிய மருத்துவர் துணை யுடன் அணுகுவது மலத்தை மட்டுமல்ல மனதையும் இளக்கி மகிழ்வைத் தரும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.