Wednesday, September 11, 2019

மதக்கலவரத்தை தூண்ட முயற்சி




கடந்த வாரம் கேரளாவின் வலஞ்சேரி அருகே உள்ள அய்யப்பா கோவில் ஒன்றை சேதப்படுத்தி மனிதக் கழிவுகளை வீசியது தொடர்பாக இந்துத்துவ அமைப்புகள் மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக ஆர்ப்பாட்டங்களை நடத்தின. பிறகு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இங்குள்ள சமூகங்களிடையே மதக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மனித மலத்தை கோவிலுக்குள் வீசியது கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்டவர் வடக்கும்பூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு 9 மணியளவில் வடக்கும்பூரத்தில் உள்ள "ஸ்ஸ்ரீதர்ம சாஸ்தா" கோவிலில் மனித மலத்தை வீசிவிட்டு பின்னர் அவர் அங்கிருந்த சித்ரகூடம் மற்றும் "பிரம்மராக்ஷர்களின்" சிலை ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளார் என்று காவல்துறையினர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.சைபர் செல் உதவியுடன் குற்றவாளியை கைது செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சித்த ராமகிருஷ்ணன் என்பவர் பாஜகவின் உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பாளர் அயபுன்னியின் தம்பியின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது சகோதரர் ராஜன் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ராமகிருஷ்ணன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் தூண்டுதல் நோக்கத்துடன் செயல்படல்) மற்றும் 295 A (வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவிலில் மனித மலம் வீசப்பட்டு சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்துத்துவ அமைப்பான இந்து அய்க்கிய வேதி மதக் கலவரத்தை தூண்டும் விதத்தில் போராட்டத்தை நடத்தியும்  உள்ளது. எனினும் மதவாதிகளுக்குப் பதிலடியாக உள்ளூர்வாசிகள் அமைதிக்காக ஒரு அணிவகுப்பை மேற்கொண் டுள்ளனர்.

மதக் கலவரத்தை உண்டாக்க இதுபோல வேலைகளில் ஈடுபடுவதற்கு சங்பரிவார்களுக்கும் பயிற்சியே அளிக்கப்படுகிறது என்று கருதுவதற்கு ஏராள சாட்சியங்கள் உண்டு.

தமிழ்நாட்டில் காங்கேயத்தை அடுத்த சதுகை என்னும் ஊரில் பிள்ளையாருக்குச் செருப்புமாலை போட்டு கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டவர்கள் இந்து முன்னணியினர் என்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதுண்டே!

அதுபோலவே தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்ததும் இதே கதைதான்.

இப்படி ஒரு வன்முறை இயக்கம் ஆபத்தான புற்று நோய்போல நாட்டில் நடமாடுவதும், இதன் அரசியல் வடிவமாக பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் இருப்பதும் எதிர்காலத்திற்கான பெரும் அச்சுறுத்தலே!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.