Monday, September 2, 2019

என்ஆர்சி பட்டியல் விவகாரம்: யாரும் நாடற்றவராக ஆகக்கூடாது - அய்.நா. வலியுறுத்தல்


தேசிய குடி மக்கள் பதிவேட்டில் தங் களை பதிவு செய்துகொள்வ தற்காக அசாம் மாநிலத்தில் 3 கோடியே, 30 லட்சத்து, 27 ஆயிரத்து, 661 பேர் விண்ணப் பித்திருந்தனர். ஆனால், கடந்த சனிக்கிழமை வெளி யான என்ஆர்சி இறுதிப் பட்டியலின்படி, அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 19 லட்சத்து, 6 ஆயிரத்து, 657 பேரின் பெயர்கள் விடுபட் டுள்ளது நாட்டில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், அகதிகளுக் கான அய்.நா. உயர் அதிகாரி பிலிப்போ கிரான்டி கூறியுள் ளதாவது: அகதிகள் உருவா வதை தடுக்க உலக அளவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பெரு மளவு மக்களை குடியுரிமை இழக்கச்செய்யும் எந்த நடவ டிக்கையும் அந்த முயற்சிக்கு பலத்த அடியாக அமையும்.
எனவே, யாரும் நாடற்ற வராக ஆகாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண் டும். அதற்காக அவர்களுக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.