Monday, September 23, 2019

மலேசிய உயர்கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம்


மலேசிய நாட்டின், சரவக் (Sarawak) நகரில் உள்ள சுவைன்பெர்ன் பல்கலைக்கழகம் (Swinburne University), அதன் பல்வேறு துறைப் பாடங்களில், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில், தொழில்துறைக்கான இன்றைய தேவைகளின்படி, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு வாய்ப்புகள் - வர்த்தகம், கம்ப்யூட்டர், டிசைன், என்ஜினியரிங் மற்றும் அறிவியல் பாடங்களில் வழங்கப்படுகின்றன. இது தவிர, பிஸினஸ் நிர்வாகத்தில் பட்ட மேற்படிப்பும், ஆராய்ச்சிப் பணிகளில் முனைவர் பட்டங்களும் கூட வழங்கப்படுகின்றன.
மலேசிய நாட்டின் சுவைன்பெர்ன் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டங்கள் மற்றும் அதன் கல்வி உதவித் தொகை திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வணிக மேலாளர் மற்றும் மாணவர் தேர்வு இயக்குனர்  ஜெகதீஷ் சிங், “எதிர்காலத்தின் தேவை களுக்கு ஏற்ற பட்டதாரி மாணவர்களை உருவாக்கும் பணியில் கவனம் செலுத்தும் எமது பல்கலைக்கழகம் எங்களுடன் உடன்பாடு மேற்கொண்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு, அவர்களை அனுப்பி நேரடி தொழில் அனுபவ வாய்ப்பைப் பெற ஏற்பாடு செய்கி றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.