Saturday, September 14, 2019

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: தமிழக அரசு அறிவிப்பு

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என்ற முறை தற்போது அமலில் இருந்துவருகிறது. இதன் காரணமாக கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கூறி வந்தது.
அதற்காக இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5ஆ-ம் வகுப்பு மற்றும் 8ஆ-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக் குனரகம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப் பட்டது. அதில் கூறியதாவது:
தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச் சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க வேண்டாம். தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என கல்வி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
மொழிப்பாடங்களுக்கு ஒரே தேர்வு
மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத் தப்படும். மொழித் தாள்களுக்கான ஒரே தேர்வு நடைமுறை நிகழ் கல்வி ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.