Sunday, September 22, 2019

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஒரு நாகரிகமாக "கீழடி நாகரிகம்" இருக்கும்: தொல்லியல் ஆய்வாளர்கள்

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி தமிழ்க்குடி' என்ற பழ மொழியை நிரூபித்துக்காட்டி யுள் ளது கீழடி அகழாய்வு. கங்கை நகர நாகரிகம் போன்று தமிழகத்தில் இரண் டாம் நகர நாகரிகம் இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஒரு நாகரிகமாக 'கீழடி நாகரிகம்' இருக்கும் என்று கூறுகின்றனர் தொல் லியல் ஆய்வாளர்கள்.
கீழடி கிராமம்: வைகை நதியின் தென்கரையில் மது ரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலை வில் உள்ளது சிவகங்கை மாவட் டம் கீழடி கிராமம். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடத்தப் பட்ட அகழாய்வில் சங்க காலத் திற்கும் பழைமையான பொருட்கள் கண்ட றியப்பட் டுள்ளன.
கீழடி மூன்று கட்ட ஆய்வுகள்: இதற்காக, இந்திய தொல்லியல் துறை கடந்த 2014ஆம் ஆண்டு ஆய்வைத் தொடங்கியது. அமர்நாத் ராமகிருஷ் ணன் என்பவரது தலைமையில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் நடத்தப் பட்டன. இதில் கிடைத்த மண் பாண்டப் பொருட்கள், கல் மணிகள் உள்ளிட்டவை உலகில் பல்வேறு இடங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. கீழடியில் 2 முதல் 3 மீ அளவில் நிலத்திற்கடியில் கிடைத்த இந்தப் பொருட்கள் கி.மு.290 ஆண்டுகள் பழமை யானது என்று கூறப்பட்டது.
அடுத்ததாக நடைபெற்ற 3ஆம் கட்ட ஆய்வு முடிவில் கட்டுமானப் பணிகளுக்கானச் சான்று எதுவும் கிடைக்க வில்லை என்று சிறீதர் தலை மையிலான குழு அறிக்கை சமர்ப் பித்தது. இதன்பின்னர், கீழடி அகழாய்வை மத்திய அரசு கைவிட்டது.
கீழடி 4ஆம் கட்ட ஆய்வு: பின்னர், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தலின் பேரில் தமிழக தொல்லியல் துறை இதனை கையில் எடுத்தது. 4ம் கட்ட அகழாய்வு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் படி, 4ஆம் கட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை தமிழக தொல்லியல் துறை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் மூன்று கட்ட அகழாய் வின்படி, கீழடியில் கிடைத்த பொருட்கள் 2200 ஆண்டு களுக்கு பழமையானவை என்று கருதப்பட்டது. ஆனால்,  4ஆம் கட்ட ஆய்வில் இது மேலும் 400 ஆண்டு களுக்கு பழமை யானது என்று தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து, 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ஆம் கட்ட அகழாய் வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. அடுத்த கட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங் களில் அகழாய்வு செய்ய இருப்ப தாகவும், ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்க விருப்பதாக மாநில தொல்லியல் துறையின் செய லாளர் உதயச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். கங்கை நகர நாகரிகம் போன்று இரண் டாம் நிலை நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்று கருதப்பட்ட நிலையில் கீழடி ஆய்வுகள், தென் இந்தியாவின் வர லாற்றை, முக்கியமாக தமி ழர்களின் வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறது என்று கூறுகிறார்கள் தொல் லியல் ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.