Thursday, September 19, 2019

"பா.ஜ.க. வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களாம்!''

கூறுகிறார் கருநாடக பாஜக அமைச்சர்
பெங்களூரு, செப்.19 பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் துரோகிகள்,பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள்''  என கருநாடக பா.ஜ.க.  அமைச்சர் கே.எஸ்.ஈஸ் வரப்பா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது. பாஜ கவின் தலைமைப்பீடமாக கருதப் படும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அமைப்புகள் இஸ்லாமிய மக்கள் மீதான வன்மத்தை நாளுக்கு நாள் தொடுத்து வருகிறது.
பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கள் மற்றும் அமைச்சர்கள் இஸ்லாமி யர்களுக்கு எதிரான கருத்தை தொடர்ந்து பேசிக்கொண்டே வருகின்றனர். இதனை பா.ஜ.க தலைமை கண்டிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்நிலையில், கருநாடக மாநி லத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா இஸ் லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க. வில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.
என்னுடைய தொகுதியில் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் ஒருபோதும் வாக்குகேட்கவில்லை. ஆனாலும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெறு கிறேன்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் இஸ்லாமியர்கள் குறித்து பேசுவதை ஊடகங்கள் செய்தியாக்க வேண்டும் என்பதால் தான் பொது இடத்தில் இப்படி பேசுகிறேன் என பகிரங்கமாக தெரிவித்த அவர், இந்தியாவின் மீது தேசப்பற்று உள்ள இஸ்லாமியர்கள் பா.ஜ.க. வுக்கு தான் வாக்களிப்பார்கள். அவ்வாறு வாக்களிக்காத இஸ்லாமி யர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான வர்கள், அவர்கள் தேசத்துரோகிகள்' என்று தெரிவித்தார்.
முன்னதாக நடந்து முடிந்த நாடா ளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்தில், இஸ்லாமியர்கள் பாஜகவின் வேட்பாளராக நிற்பதற்கு பா.ஜ.க அலுவலகத்தை 10 ஆண்டுகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.