Friday, September 13, 2019

அசோக் லேலண்ட் நிறுவனம் 16 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அறிவிப்பு



சென்னை,செப்.13, செப்டம்பர் மாதத்தில் சென்னை எண்ணூர் அசோக்   லேலண்ட் நிறுவன தொழி லாளர்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. செப் டம்பர் 14, 16, 19, 20, 21, 23, 24, ஆகிய 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள் ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு 7.5 சதவீதம் ஆகும். ஆனால் நாட்டில் இந்த துறை தற்போது பெரும் சரிவை சந்தித்துள் ளது. பல்வேறு வாகன தயா ரிப்பாளர்களும், விநியோ கஸ்தர்களும் நிறுவனங்களை மூடி வருகின்றனர்.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது மானேசர் மற்றும் குர்கான் ஆலைகளை இரண்டு நாட் களுக்கு மூடும் திட்டத்தை அறிவித்தது. சென்னை எண்ணூரில் கனரக வாகன உற்பத்தி செய்யும் அசோக் லேலண்ட் என்ற நிறுவனத் தின் தொழிற்சாலை உள் ளது. இங்கு, 1800க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர் களுக்கு 2018-_19ஆம் ஆண்டுக் கான ஊக்கத் தொகை கடந்த மே மாதம் கொடுத் திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் தொழிலாளர்களுக்கு நிர் வாகம் ஊக்கத் தொகை வழங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத் தினர்.

இதுதொடர்பாக, தொழிற்சங்கம், நிறுவன அதிகாரிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஊக்கத் தொகை வழங்க நிர் வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலை யில் அசோக் லேலண்ட் நிறுவனமும் தங்கள் ஊழி யர்களுக்கு கடந்த 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 5 நாட்கள் கட்டாய விடுப்பு அளித்தது. வாகன உற்பத்தி குறைவால் இந்த விடுமுறை அறிவிக்கப் பட்டது. இந்த அறிவிப்பால் ஊதியமின்றி தற்காலிக ஊழியர்கள் பாதிக்கப்படு வதாக குற்றச்சாட்டு எழுந் தது.

இந்த நிலையில் அசோக் லேலண்ட் சென்னை எண் ணூர் ஆலையில் 16 நாட் களுக்கு உற்பத்தியை நிறுத் தியது. தற்போது எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவன தொழிலாளர்களுக்கு மேலும் 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள் ளது. செப்டம்பர் 14, 16, 19, 20, 21, 23, 24, ஆகிய 7 நாட்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட் டாய விடுப்பு அறிவித்த செப்டம்பர் 14, 19, 20, 21, 24 ஆகிய நாட்களுக்கு ஊதியம் வழங்குவது பற்றி அசோக் லேலண்ட் தொழிற்சங்கத் துடன் பேசி முடிவெடுக்கப் படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.