Monday, September 2, 2019

உப்பில் கவனம்...


உப்பு எனும் போது அதனை வெறுமே சோடி யம் குளோரைடுடன் மட்டுமே சுருக்கிக்கொள் கிறோம். சோடியம் குளோ ரைடை மிகுதியாக எடுத்துக் கொண்டாலும் மிகுதிப் படிவத்தை நீக்க, நாம் நீர் அருந்த நேரிடும். சோடியம் குளோரைடு மட்டுமல்ல.  உயிர்த் தாதுக்களான பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை உணவில் மிகுதியாகச் சேர்க்கப் பட்டாலும் அதாவது ஒரே சுவையுள்ள உணவைத் தொடர்ந்து எடுத்து வருகிற போதும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளும் நெப்ரான்களின் சுத்திகரிக்கும் வேலைப் பளுவும் கூடுதலாகிவிடும்.
நீரின் அளவும் சிறுநீரின் அளவும்
குடிக்கும் நீரின் அளவு வெளியேறும் சிறுநீரின் அளவு இரண்டும் எப்போதும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டு மென்பதில்லை. ஆனால், அதீத நீரருந்தும் வேட்கையும் அதீத சிறுநீர்ப் போக்கும் உடலின் நீருடன் நேரடித் தொடர்பில்லாத பிற உள்ளுறுப்புகளின் பாதிப்பையே காட்டுகிறது. நாம் நீரே அருந்தாதபோதும் நமது உடலினுள் நீர் சேர்மானம் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. உண்ணும் உணவில் உள்ள நீர்மத்தைச் சிறுநீரகம் பயன்படுத்திக் கொள்ளும். காற்றில் உள்ள ஈரப் பதத்தையும் சிறுநீரகம் உள்வாங்கிக்கொள்ளும். உணவின் நீர்மம் மட்டுமல்லாமல் உப்புச் சுவையும் சிறுநீர கத்தின் செயல் திறனைச் சரியான அளவில் வைத்திருக்க உதவும்.
உப்பைக் குறைப்போம்
வெப்ப மண்டலவாசிகளான நமது உடலிலிருந்து வியர்வை (கழிவு) உப்பாக வெளியேறிவிடும்போது நாவின் தேவையுணர்வுக்கு ஏற்ப உப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்தான். ஆனால், வியர்வை வெளியேறும் வாய்ப்புகள் குறைந்துவரும் நிலையிலும் நாம் உப்பின் பயன்பாட்டைக் குறைப்பதில்லை.
நம்மளவுக்கு வேறெந்த நாட்டினரும் உப்பை இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக மேற்கத்தியரும், சீனர்களும் நம்மில் பத்தில் ஒரு பங்குகூட உப்பைச் சேர்க்க மாட்டார்கள். உப்பு மட்டுமல்ல பிற காரம், இனிப்பு, புளிப்புச் சுவைகளையும் சேர்க்க மாட்டார்கள்.
அவர்களை ஒப்பிட நம்மிடம் உடலுழைப்பு அதிகம் என்றாலும் இயந்திரமயமாதலுக்கு ஏற்ப நாம் உப்பைக் குறைத்துக்கொண்டால் நமது சிறுநீரகம் நன்றி பாராட்டும். உயிர்த் தன்மையும் ஈரத் தன்மையும் கொண்ட கீரை, காய்கறி, இறைச்சி அனைத்திலும் இயல்பாகவே உப்பு உண்டு. நாம் சமைக்கும்போது வேகும் முன்னர் உப்பைச் சேர்த்தால் மூலப் பொருளில் உள்ள உப்பு வெளிப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. சமைக்கும் பொருள் வேகும்போது உள்ளிருக்கும் உப்பு வெளிப்பட்ட பின்னர் இறுதியாகச் சுவைத்துப் பார்த்துக் குறைந்த அளவில் உப்பு சேர்த்தாலே போதும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.