Saturday, September 7, 2019

தமிழ கத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை வழங்கி கவுரவித்தார். குடியரசு முன்னாள் தலை வர் டாக்டர் எஸ். ராதாகிருஷ் ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசி ரியர் தினமாகக் கொண்டா டப்படுகிறது. இதையொட்டி, தேசிய நல்லாசிரியர் விருது குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வருகிறது. இந்தாண்டு தேசிய நல்லா சிரியர் விருதுக்கு 46 பேர் மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச் சகத்தால் தேர்வு செய்யப் பட்டனர். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 46 பேரில் தமிழகத்தின் கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலை மையாசிரியர் ஆர்.செல்வக் கண்ணன், கோபிச்செட்டிப் பாளையம் வைரவிழா மேல் நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் எம்.மன் சூர் அலி, புதுச்சேரி கூனிச்சம் பட்டு பாவேந்தர் பாரதி தாசன் அரசுத் தொடக்கப் பள்ளியின் பொறுப்புத் தலை மையாசிரியர் எஸ். சசிக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந் தனர்.


காஷ்மீர் மாநி லம் புல்வாமாவில் நடை பெற்ற தாக்குதலுக்கு உளவுத் துறை குளறுபடியே காரணம் என சி.ஆர்.பி.எஃப். தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல் வாமா மாவட்டத்தில்  பிப்ர வரி மாதம் பாதுகாப்புப் படை  வீரர்கள் பயணித்த பேருந்து மீது, பயங்கர வாதிகள் வெடிமருந்துடன்  மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.
பாதுகாப்புப் படையின் விசாரணை அமைப்பு  தங்கள் விசரணையை அறிக்கையாக தயாரித்து பாதுகாப்புப்படை இயக்குநர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ''புல் வாமா தாக்குதலில் 40 வீரர் கள் பலியானதற்கு உளவுத் துறையின் குறைபாடுகளே காரணம்.  கார் மூலம் தற் கொலைப் படை தாக்குதல் சம்பவம் தொடர்பான எவ் வித எச்சரிக்கையும் கொடுக் கப்படவில்லை.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எந்தவொரு உளவுத்துறை அமைப்புகளும் தாக்குதல் தொடர்பான எந்தவித எச்சரிக்கையையும் கொடுக்கவில்லை. சி.ஆர். பி.எஃப். வீரர்களின் படைக் குழு வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் ஒரே நேரத் தில் சென்றது. அதற்கான ஆணையிட்ட தகவல் தீவிர வாதிகளுக்குச் சென்றுள்ளது. இந்த நிகழ்வு  தீவிரவாதி களுக்கு சாதகமாக அமைந் தது'' இவ்வாறு கூறப்பட் டுள்ளது.
மேலும், பணியில் இருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர் தற் கொலைப்படை வாகனத்தை நிறுத்த முயற்சித்து அது தோல்வியில் முடிந்து இருப் பினும் அவர் உடனடியாக அடுத்த நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை. இந்த நிகழ்வு  சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் படைக்குழுவினர் சென்ற வண்டியில் இருந்த பாது காப்பு  கேமராவில் பதிவா கியுள்ளது. முன்னதாக புல் வாமா தாக்குதலுக்கு உள வுத்துறையின் தோல்வி கார ணமல்ல என்று உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வ மாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில், அதற்கு நேர் மாறாக தற்போது சி.ஆர். பி.எஃப்.பின் அறிக்கை வந் துள்ளது.
புல்வாமா தாக்குதல் தேர் தல் லாபத்திற்காக நடத்தப் பட்ட தாக்குதல் என்று பல தரப்பில் பேசப்பட்டு வந்தது. அதே போல் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் பல இடங்களில் புல்வாமா தாக் குதலில் மரணமடைந்த வீரர் களின் படங்களைப் போட்டு தேர்தல் பிரச்சாரம் நடத் தினர். தேர்தல் ஆணையம் மரணமடைந்த ராணுவ வீரர் களில் படத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை செய்தும் மோடியின் மேடை யில் ராணுவ வீரர்கள் படம் இடம்பெற்றது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.