Saturday, September 7, 2019

தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தமிழ கத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை வழங்கி கவுரவித்தார்.
குடியரசு முன்னாள் தலை வர் டாக்டர் எஸ். ராதாகிருஷ் ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசி ரியர் தினமாகக் கொண்டா டப்படுகிறது.
இதையொட்டி, தேசிய நல்லாசிரியர் விருது குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப் பட்டு வருகிறது.  இந்தாண்டு தேசிய நல்லா சிரியர் விருதுக்கு 46 பேர் மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச் சகத்தால் தேர்வு செய்யப் பட்டனர்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 46 பேரில் தமிழகத்தின் கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலை மையாசிரியர் ஆர்.செல்வக் கண்ணன், கோபிச்செட்டிப் பாளையம் வைரவிழா மேல் நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் எம்.மன் சூர் அலி, புதுச்சேரி கூனிச்சம் பட்டு பாவேந்தர் பாரதி தாசன் அரசுத் தொடக்கப் பள்ளியின் பொறுப்புத் தலை மையாசிரியர் எஸ். சசிக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந் தனர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.